Advertisment

Rasi Palan 2nd May: இன்றைய ராசிபலன்! மீண்டும் புத்துயிர் பெற்று விரைந்து முன்னேறுவீர்கள்

Rasi Palan Today, 2nd May Rasi Palan in Tamil: எமோஷனல் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 2nd May: இன்றைய ராசிபலன்

Rasi Palan 2nd May: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 2nd May 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 2nd May 2019 : இன்றைய ராசி பலன், மே 2, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமெனில், முதலில் நீங்கள் அதில் மிக வலிமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், மிகப்பெரிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். அதில் உங்களால் ஜொலிக்க முடியும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களின் தன்னம்பிக்கையை இழந்து காணப்படுவீர்கள். ஆனால், அது குறுகிய காலத்திற்கு மட்டுமே. மீண்டும் புத்துயிர் பெற்று விரைந்து முன்னேறுவீர்கள். மந்தமான நாள் இது.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

இன்று உங்கள் செயலுக்கு பாராட்டு கிடைக்கும் நாள். அதேசமயம், உங்கள் பொறுப்பும், கடமையும் மேலும் அதிகரித்திருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ளோரின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டு உங்களை தாக்கும் நாள். எதேச்சையாக சந்திக்கும் நபர்களால் கூட, சிக்கல்களே உருவாகும். இருப்பினும், அவற்றினை உங்கள் மதியால் வெல்வீர்கள். குறைந்தபட்சம் முயற்சி செய்வீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மேலே எழும்பி முன்னுக்கு வர வேண்டுமே என்று நினைத்தாலும், உங்களுக்கு எதிராக சில அலைகள் இருக்கும். உங்கள் நண்பர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நிதிநிலைமை இன்று எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உங்கள் துணையோ அல்லது உங்களது நிறுவனத்திலோ, நீங்கள் வந்து தான் சிக்கலான பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்று காத்திருப்பார்கள். பண தேவைக்காக, உங்களது சிந்தனைகள் உங்களை விட ஸ்மார்ட்டாக இருக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களால் உங்களுக்கு பயன் கிடைக்கும். கேட்பதை வைத்து எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். சில விஷயங்களில் உங்களுக்கு தெளிவு ஏற்படாமல் இருக்கலாம். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இந்த நிலை மாறும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

முக்கியமான பணிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுங்கள். இவ்வளவு நாட்களாக தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு பயனற்ற முடிவுகளை அளித்து கொண்டிருந்தீர்கள். எமோஷனல் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்கள் கற்கும் திறன் அதிகரிக்கும். மாணவர்களின் செயல்பாட்டில் நல்ல மாற்றங்கள் தெரியும். ஊடகங்களில் பணியாற்றுவோருக்கு உயர் பதவிகள் கிடைக்கவோ, ஊக்கப் பரிசு போன்றவையோ கிடைக்க வாய்ப்புள்ளது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வெற்றிப் பெற வேண்டுமெனில், உங்கள் பணிகளை எவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் தொடங்குங்கள். அப்படி தாமதப்படுத்தினால், அது உங்கள் பார்ட்னருக்கோ, போட்டியாளருக்கோ சாதகமாக அமையும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்கள் நிதி நிலைமை அபாரமாக இருக்கும். ஆனால், உங்கள் தருணங்களை கவனமாக தேர்ந்தெடுங்கள். அப்போது தான் வெற்றியை வசப்படுத்த முடியும். ரொமான்ட்டிகான மூடில் இன்று இருப்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

எதிர்கால திட்டமிடலை நோக்கி உழைப்பீர்கள். பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வினையாற்றும் உங்களுக்கு இன்றைய நாள் சுமாரான நாள். உடல்நலனில் அக்கறையாக இருக்க வேண்டும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment