Advertisment

Rasi Palan 2nd November 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 2nd november Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 2nd November 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 2nd November 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 2nd November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 2nd November 2019: இன்றைய ராசி பலன், நவம்பர் 2, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நிதிவிவகாரங்களில் அதிக கவனம் வேண்டும். போட்டி, பந்தயங்கள் போன்ற கேளிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உங்கள் உரிமைகளை பெற போராட வேண்டியிருக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும் என்பதால் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. நீண்டநாள் விவகாரங்களில் சிறு நிம்மதி கிடைக்கும். வாகனப்போக்குவரத்தில் அதிக கவனம் அவசியம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நாவடக்கம் அவசியம். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும் என்பதால் செயல்களில் கவனமுடன் இருக்க வேண்டும். பாவத்துக்கு பரிகாரம் பாவம் அல்ல என்பதை உணர்வீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

தன்னடகத்துடன் நடந்துகொள்வீர்கள். புதியவனவற்றை கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். அமைதியுடன் இருப்பதால் ஏற்படும் பலன்களை உணர்வீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துகொள்வீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மற்றவர்களின் அறிவுரைகளால் மனச்சோர்வு அடைவீர்கள். யார் என்ன அறிவுரை சொன்னாலும் முடிவு உங்களுடையதாகவே இருக்கும். நீண்ட தொலைவு பயணத்துக்கு திட்டமிடுவீர்கள். மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மகிழ்ச்சியான நிகழ்வுகளும், உங்களது மன சஞ்சலத்தால் துக்ககரமான நிகழ்வாக மாறும் என்பதால் மன சஞ்சலத்தை தவிர்ப்பீர். தோல்வியின் விகிதம் அதிகமாக இருப்பதால், ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது சாலச்சிறந்தது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். மனமகிழ்ச்சியான நாள். பணியிடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

கிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் தங்குதடையின்றி நடைபெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மகிழ்ச்சியான நாள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நாம் ஒன்று நினைக்க நடப்பது வேறு ஒன்று ஆக இருக்கிறதே என்று எண்ணுவீர்கள். காத்திருந்தால் காயும் கனியாகும் என்பதை ஒருநாளும் மறக்கவேண்டாம். உணர்ச்சிவசப்படுவதை குறைத்துக்கொள்ளுங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பயணங்களால் நன்மை பெறுவீர்கள். உற்சாகமான மனதுடன் காணப்படுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை நிலவும். உங்கள் கருத்துக்கு மதிப்பு கிடைக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சிறிய அளவிலான பயணங்கள் மேற்கொள்வீர்கள். புதிய முயற்சியை தொடங்குவீர்கள். மற்றவர்களை தலைமையேற்று வழிநடத்தி செல்லும் அளவிற்கு உயர்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

இயலாததை நினைத்து வருத்தம் கொள்வதில் பயன் ஏதும் இல்லை என்று எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ அப்போது இருந்து உங்களுக்கு நல்லகாலம் தான். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment