Advertisment

Rasi Palan 30th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 30th July Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 30th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan 30th July: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 30th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 30th July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 30, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

இன்று உங்கள் ராசியில் கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சங்கிலித் தொடரை இணைந்து புதிய தொடரை உருவாக்குகிறது. இதனால், தொழில் ரீதியிலான முக்கியமான முடிவுகள் இன்று நீங்கள் தாராளமாக எடுக்கலாம். அதுவும் அதிக நேரம் இருப்பதால் நீங்கள் நின்று நிதானமாக முடிவுகளை எடுக்கலாம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

சந்தேகத்துக்கு இடமின்றி நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மனிதர். இதனால், குடும்ப உறுப்பினர்களில் சிலர் உங்களை ஏளனமாக எடைப் போட்டு விடுவார்கள். சந்திரன் உங்களுக்கு சாதகமாக நிற்பதால், முதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் உங்களை நம்புவர்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

அடுத்த வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டிய காலக்கட்டம் இது. ஆகையால், தாமதம், பதட்டம் போன்ற எந்த விஷயங்களுக்கும் இடம் கொடுக்காதீர்கள். இவையெல்லாம், உங்களின் முன்னேற்றத்தை தடைக் கல்லாக மாறிவிடும். உங்களின் உண்மையான பிரச்சனை என்ன என்பதை கண்டறியுங்கள். அப்போது தான் அதனை உடனே களைய முடியும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

அடுத்த வார கடமைகள் குறித்து இப்போதே கணக்கிடத் தொடங்குவீர்கள். கூட்டு முயற்சி உங்களுடைய வெற்றியை வசப்படுத்தும் பணியை செம்மையாக செய்யும். வழக்கத்தை விட கூடுதலான வசீகரத்துடன் தோற்றமளிப்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

வாரத்தின் முடிவில் சில நன்மைகள் நடக்கலாம். பணவரவு இருக்கும். குடும்பத்துடன் நேரம் செலவழிப்பீர்கள். மற்றவர்களின் மீது அதிக கரிசனம் காட்டுவீர்கள். இதனால், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

சந்திரன் இன்று மிக ஆழமாக உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார். இதனால், கட்டுப்பாடான உணர்ச்சிகளுடனும் சிந்தனை கொண்ட நெஞ்சத்தோடும் வலம் வருவீர்கள். ஏற்கனவே திட்டங்கள் வைத்திருந்தால், அந்த கோடிட்ட இடங்களை நிரப்ப இப்போது மிகச் சரியான நேரமாகும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கடந்த காலங்களில் உங்களின் முயற்சிகள் மற்றும் தியாகங்கள் அனைத்தும் வீணாய் போனதாய் உணர்ந்தீர்கள். இருப்பினும், தவறான காரணங்களுக்காக கூட இருந்தாலும், நீங்கள் மிகச் சரியான முயற்சியை தான் மேற்கொண்டீர்கள் என்பதை உணருவீர்கள். குறைந்த பட்சம், இப்போது உண்மையை தெரிந்து கொண்ட நீங்கள், அடுத்த முறை அதே பிரச்னையை சிறப்பாக கையாளுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்களைச் சுற்றி பிரகாசமான ஒளிவட்டம் சுற்றுவது உங்களுக்கு தெரிகிறதா? எங்களுக்கு தெரிகிறது. இதற்கு முன்னதாக, மற்றவர்கள் உங்கள் திறமையையும், பணியையும் குறைத்து மதிப்பிட்டு, உங்களை விட அவர்கள் சிறந்தவர்கள் என்று எண்ணி வந்தார்கள். இப்போது நீங்கள் அவர்களை ஓவர்டேக் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் ஆளுமையை வெளிகாட்டும் தருணம் இது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நீங்கள் விரும்புவதை புதன் உங்களுக்கு நிறைவேற்றிக் கொடுப்பார். வழக்கத்து மாறாக, சுவாரஸ்யமான, திகிலூட்டும் அனுபவங்களை எதிர் நோக்கி காத்திருக்கலாம். உங்கள் திட்டத்தை மறு யோசனைக்கு உட்படுத்தினால், நிச்சயம் அது மெகா வெற்றி தான்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்களின் எண்ணங்களை, நடிவடிக்கைகளை மாற்றிக் கொண்டால், நிச்சயம் உங்களைச் சுற்றும் அனைத்து பிரச்சனைகளும் தீரும். இப்போது, உங்கள் திட்டங்கள் காலாவதியாகிவிட்டது. புதிய முயற்சிகள் அவசியம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

தவறான புரிதல், தவறுகள் அல்லது தப்புகள் போன்ற எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கிரகங்கள் பிரகாசமாக உள்ளது, குடும்பத்தை சிறப்பாக வழிநடத்தவும், தனிப்பட்ட உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் இது சரியான நேரம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

சந்திரன் உங்களுக்கு பக்கபலமாக இருப்பதால், உங்களது உணர்வுகள் கட்டுக்கோப்பாக இருக்கும். அதுவே, உங்கள் இலக்கை நோக்கி முன்னேற தேவையான விவாதங்களை, ஆலோசனைகளை நோக்கி உங்களை நகர்த்திச் செல்லும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment