Advertisment

Rasi Palan 31st May: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 31st May Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 31st May: இன்றைய ராசிபலன்

Rasi Palan 31st May: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 31st May 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 31st May 2019 : இன்றைய ராசி பலன், மே 31, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

ஒரேயொரு உண்மை சொல்லட்டுமா, உங்களை இவ்வளவு நாள் சுற்றி வந்த தொல்லைகளுக்கு எண்டு கார்டு போடப்பட்டாச்சு. இந்த வாரத்தில் இருந்தே உங்களுக்கான தருணங்களுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது. நிம்மதியான நாள் இது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களது ஆற்றல் குறைந்து காணப்படும். நேர்த்திய நீங்கள் செதுக்கி வைத்த திட்டங்கள் கூட தோற்றுப் போக வாய்ப்புள்ளது. இருப்பினும், உங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள கால அவகாசம் கிடைக்கும். அதற்குள் சுதாரித்துக் கொள்ளுங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்கள் வழியில் நீங்கள் செல்வதை யாராலும், எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு பாதிக்காத வண்ணம் உங்கள் செயல்பாடு இருக்கும். உடல் நலனில் சற்று பின்னடைவை உணர்வீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மிகக் கடினமான சூழ்நிலைகளை நீங்கள் கடந்து செல்ல நேரிடும். அதை நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால், உறுதியான உங்கள் குணம் அந்த சூழ்நிலைகளை தூக்கி சாப்பிட்டு வெற்றியை வசப்படுத்தும். சோதனை வருவது போல் தெரிந்தாலும், அது சாதனையாகி உங்க வசம் நிற்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கடந்த கால தவறுகளின் விளைவுகள் உங்களை துரத்திக் கொண்டிருக்கும். இருப்பினும் வருந்த வேண்டாம். அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து உங்களுக்கான பாதை தெளிவுபடும். ஐடியா புலப்படும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் வந்த பிரச்சனைகள் முற்றிலும் விலகும். நண்பர்கள் வகையில் நிறைய உதவி கிடைக்கும். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு. கணவன் – மனைவி உறவில் விரிசல் நீங்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

குடும்பத்தில் பொறுமையாக செயல்படுங்கள். பணவரவில் சின்ன சிக்கல் இருக்கும். அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்க தொடங்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உடன்பிறப்பு வகையில் பண விரயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் தவறான சேர்க்கையை தவிர்க்கவும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும். மிக கவனமாக அனைத்தையும் கையாள வேண்டியது அவசியம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. குல தெய்வ பிராத்தனை நிறைவேறும். கடன் விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிறைய வாய்ப்புகள் வரும். மனமாற்றம் ஏற்படும். காதல் விவகாரம் கைகூடும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சாதுரியமான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவருவீர்கள். உடன்பிறந்தோர் நலனில் அக்கறை கொள்ளவும். பணப்புழக்கம் நல்ல முறையில் இருக்கும். தொழில், வியாபாரத்தை பெரியளவில் கொண்டு செல்ல முடியும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். வாழ்க்கை தரம் உயர வழி வகை கிடைக்கும். மனதில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை விலகும். தொழில், வியாபாரம் எண்ணம் போல் இருக்கும். கொஞ்சம் பொறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்படுவீர்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment