Advertisment

Rasi Palan 31st October 2018: இன்றைய ராசிபலன்

Daily Rasi Palan Tamil, Oct 31, 2018: நின்று, நிதானமாக கவனிக்க வேண்டிய நாள் இன்று. உங்கள் முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடுங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan Today: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 31st October 2018 in Tamil : கேட்பதை வைத்து எதையும் நம்ப முடியாது. பார்ப்பதை வைத்தும் எதையும் நம்ப முடியாது. பேசுவதை வைத்தும் நம்ப முடியாது. அந்த இறைவன் ஒருவனே அனைத்திற்கும் காரணம். அவனே நம்பிக்கை. அவனை எல்லை.

Rasi Palan 31st October 2018 : இன்றைய ராசி பலன் 31 அக்டோபர் 2018

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

சந்திரன் உங்களுக்கு சாதகமாகத் தான் உள்ளது. ஆனால், மற்ற கிரக நிலைகளின் அமைப்புகளால் இன்று நிச்சயமற்ற நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதி தேவை. சில தடுமாற்றங்கள் ஏற்படும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மற்றவர்களிடம் இருந்து முட்டாள்த்தனமான ஐடியாக்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் இலக்கை நோக்கி முன்னேறி சென்றுக் கொண்டே இருங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நீங்கள் எதிர்பார்த்த தருணங்கள் வந்து சேரும். வெற்றிகரமான நாள் இது. உங்கள் திட்டங்கள் செயல் வடிவமாக மாறும் தினம் இது. கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்ததால், பக்குவத்துடன் செயல்பாடுகளை அணுகுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். அது உங்களை மேலும் வலிமையான நபராக மாற்றும். மன அழுத்தங்கள் குறையும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

விவாதங்களும், பிரச்சனைகளும் உங்களை சுற்றி சுற்றி வரும். அதனை தவிர்க்க வேண்டியது அவசியம். சுயக்கட்டுப்பாடு என்பது உங்களுக்கு தேவை. முக்கியமாக, இன்றைய தினம் அமைதியை விடாமல் கடைபிடிக்க வேண்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

சூரியன் உங்களுக்கான வெற்றியை கொண்டு வரும். ஆனால், சிறிது தடுமாற்றம் இருக்கும். சுய ஆர்வம் கொண்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அதுவே உங்களை முன்னேற வைக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்களுக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ, அதை விடாப்பிடியாக நின்று பெற வேண்டியது உங்கள் கடமை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெற்றிகரமான நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்களை சுற்றி பாஸிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும். அது உங்கள் செயல்பாடுகளை நகர்த்திச் செல்லும். உங்கள் எண்ணங்களே உங்களது முடிவாக இருக்கும். உங்கள் துணைக்கு பிடித்தவாறு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும், உங்கள் கருத்தில் உறுதியாக இருப்பீர்கள். துணிச்சல் உங்களின் பலம். நேர்மையான அணுகுமுறை உங்களை கௌரவமான இடத்திற்கு கொண்டுச் செல்லும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உடல் நலத்தில் அக்கறை தேவை. குடும்பத்தில் அன்பை விதைக்க முயற்சி செய்யுங்கள். காதல் கைகூடும். வெளிநாடுகளில் வேலைக்கு ஏற்பாடு செய்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

இன்று பலன்களில் ஏற்றத்தாழ்வு காணப்படும். செயல்கள் சுமுகமாக நடைபெற அனுசரித்து நடக்க வேண்டும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. பணத்தை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நின்று, நிதானமாக கவனிக்க வேண்டிய நாள் இன்று. உங்கள் முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடுங்கள். அப்போது தான் அது மதிப்பு பெறும். குடும்பம் முதல் ஆரோக்கியம் வரை கவனமாக இருக்க வேண்டும்.

Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment