Rasi Palan 3rd August: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 3rd August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 3rd August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 3, 2019 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் […]

Rasi Palan 3rd August: இன்றைய ராசிபலன்
Rasi Palan 3rd August: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 3rd August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 3rd August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 3, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் நண்பர்களின் கடந்த கால அனுபவங்களை வைத்து புதிய முடிவுகளை எளிதாக எடுக்க உகந்த நாள். உங்களது நற்செயலுக்கு பலர் உறுதுணையாக இருப்பார்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

புதன் உள்ளிட்ட கோள்களின் ஆதிக்கத்தால், உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும். தவறு செய்பவர்களிடம் அதை சுட்டிக்காட்டி நற்பெயர் வாங்குவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

வருமானத்திற்கு ஏற்ற புதிய வாய்ப்புகள் அடுத்தடுத்து வரும். உங்கள் கனவு நனவாகும் நாள் சந்திரன் உங்களுக்கு சாதகமாக உள்ளார்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

நீங்கள் பெரிதாக நம்பியிருந்தவர்கள் உங்களை விட்டு விலகுவர், பயம் வேண்டாம். தக்க சமயத்தில், நண்பர்கள், உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தோல்வியிலும் மனம் தளரவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டிய நாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

எதிர்பாராத திருப்பங்களால் நன்மை ஏற்படும் நாள். சூரியன் உள்ளிட்ட கோள்களின் பார்வையால், நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நினைத்த காரியங்கள் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் தங்குதடையின்றி நிறைவேறும் நாள். மனசஞ்சலத்தை தவிர்ப்பது நல்லது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய நாள். பொதுஇடங்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். ஏதோ ஒன்று உங்கள் மனதை உறுத்திக்கொண்டு இருக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

யார் என்ன சொன்னாலும், நீங்கள் நினைத்ததே சரி என்ற மனநிலையில் இருப்பீர்கள். இதன்காரணமாக, நண்பர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நண்பர்கள் தக்க சமயத்தில் சிறந்த ஆலோசனைகளை வழங்குவார்கள். நீண்ட நாள் கனவு திட்டத்திற்கான முயற்சிகளை இன்றிலிருந்தே துவங்குவீர்கள். வரும் நாட்களில் உங்கள் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். எனவே, அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

மன சஞ்சலத்துடன் இருப்பீர்கள். ஒரு செயலை முடிக்கும் முன்னரே, மற்றொரு செயலை செய்ய துவங்குவீர்கள், பின் வருத்தப்படுவீர்கள். நண்பர்களிடம் உதவியை எதிர்பார்ப்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

அதிக உணர்ச்சிவசப்படும் நாள். ஏதாவது ஒன்றை மறந்துவைத்துவிட்டு அதை தேடுவதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுவீர்கள். நான் செய்வதே சரி என்ற மனப்போக்கை கைவிடுவது நல்லது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

ஓய்வுன்னா என்ன என்று கேட்பீர்கள். அதிகம் பதட்டம் அடைவீர்கள். தியானம் செய்வது நல்லது. எல்லாவற்றிற்கும் நம்மிடமே விடை உள்ளது என்பதை அறியாமல் செயல்படுவதால் சில இழப்புகளை சந்திப்பீர்கள்.

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 3rd august

Next Story
Rasi Palan 2nd August: இன்றைய ராசிபலன்Rasi Palan 2nd August: இன்றைய ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com