Advertisment

Rasi Palan 3rd January 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan in Tamil 3rd January 2020: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 3rd January 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 3rd January 2020: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 3rd January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ... மகிழ்ச்சியில் சென்னை !

Rasi Palan 3rd January 2020: இன்றைய ராசி பலன், ஜனவரி 3, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நன்றி தெரிவிக்க ஆரம்பித்தால், எல்லோருக்கும் தொடர்ந்து நன்றி தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். எதையும் நிதானமாக யோசித்து செயல்படுங்கள். கோவிலுக்கு சென்று வழிபடுவது உங்களுக்கு நல்லது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களது நீண்டகால நிதி சேமிப்பு திட்டங்கள் உங்களது பொருளாதார நிலையை வெற்றிகரமாக கொண்டுச் செல்லும். தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். உங்களது தனித்திறமை மூலம் மற்றவர்களை விட வேறுபட்டு தெரிவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

இலக்குகளை நோக்கி பயணிப்பீர்கள். சொந்த விவகாரங்களில் கூடுதல் அக்கறை தேவை. குறிப்பாக, உறவுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தருணங்களை தவறவிட்டு விடாதீர்கள். நண்பர்களையும் லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

தரமான வெற்றிகளை பதிவு செய்வீர்கள். பெற்றோர்கள் உங்களை அணுகும் விதம் மரியாதை மிக்கதாக மாறும். முதல் பாதியில் நீங்கள் பட்ட அவமானத்துக்கும், வேதனைக்கும் இனி தான் சரியான தீனியை கொடுக்கப் போகிறீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

அடுத்து உங்கள் செயல்பாடு என்ன என்பதை முடிவு செய்ய மிகச் சரியான தருணம் இது. எதையும் அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருக்காமல், களமிறங்கி செயல்படத் தொடங்குங்கள். உண்மையாக செயல்படுவீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

தேவையில்லாத விவாதங்கள் மற்றும் பிரச்சனைகள் மூலம் உங்கள் இன்பங்கள் எங்கே முடிவுற்றது என தேடும் நிலை ஏற்படும். இதற்கு உடனடி தீர்வு காண்பதை விட, நீண்ட கால நிவாரணி காண்பதே சிறந்தது. உங்களே நீங்கள் மிகவும் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். சில தருணங்களில் நீங்களே பிரச்சனையை மோசமாக்கி விளைவை அனுபவிப்பீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

தடைகளையும், சட்டங்களையும் உடைத்து எறிவீர்கள். ஆனால், சட்டத்தின் மாண்பை கடைபிடியுங்கள். உங்கள் இலக்குகளை எட்ட மேலும் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வழக்கமான பாணியையே கடைப்பிடித்து, அழுத்தங்களுக்கு ஆளாகாதீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனைகளும், தொல்லைகளும் வேக்வம் கிளீனர் கொண்டு துடைத்தது போல சுத்தமாக துடைத்து எடுக்கப்படும். சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். உங்கள் மனதில் தோன்றியதை பேசிவிட்டு, பின்பு வருத்தம் தெரிவிக்கிறேன் என சொல்லாதீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

இன்று நீங்கள் பதட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வளர்ச்சி குறித்த உங்கள் முயற்சிகளில் முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். உங்களின் அமைதியான மனநிலை காரணமாக நீங்கள் இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும். உங்கள் நிதி வளர்ச்சியை கணிசமாக மேம்படுத்துவீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்களது ஆட்சி கிரகநிலை அதன் நிலையை மாற்றிக் கொள்ளும். உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆனால், அது பயனுள்ளதாகவே இருக்கும். மேலும் சில மாதங்களுக்கு நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்களது தவறான முடிவுகள் சில மோசமான விளைவுகளை உங்கள் முன்னேற்றத்தில் ஏற்படுத்தும். செயல்களை சீராக மேற்கொள்ள நீங்கள் மிகவும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் நம்பிக்கை இழப்பீர்கள். எனவே உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment