Today Rasi Palan, 4th September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 4th September2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 4, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
தொழில் விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால், இழப்புகளை தவிர்க்கலாம். தொலைநோக்கு திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள். கடினமாக உழைக்கவேண்டிய நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
மனதிற்கு இனிய சம்பவங்கள் நடந்தேறும் நாள். சிறிய முயற்சியும் பெரிய அளவிலான பலனை தரும். நிதிவிவகாரங்களில் நிலவிவந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
வெற்றிப்பாதையில் வீறுநடை போடுவீர்கள். உறவினர்கள், நண்பர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவார்கள். கேட்ட இடங்களிலிருந்து கடன் உடனடியாக கிடைக்கும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
செய்யும் செயல்களில் கவனமாக அடிஎடுத்துவையுங்கள். கிரகங்கள் சாதகமற்ற இடங்களில் இருப்பதினால், எதிலும் ஸ்திரத்தன்மையற்ற நிலையிலேயே இருப்பீர்கள். நிதானம் காப்பது நல்லது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
குழந்தைகள் மற்றும் பிரியமானவர்களின் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
வாகனம் ஓட்டும்போது அதிக வேகம் தவிர்ப்பது நல்லது, விபத்து ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பணியிடங்களில் சோம்பல் தவிர்ப்பது நல்லது. பணியிடங்களில் அதிக கோபம், விரக்தியான பேச்சு உள்ளிட்டவைகளால், அதிகம் காயம் பட வாய்ப்பு . முன்கோபம் தவிர்ப்பீர்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
கொடுக்கல் - வாங்கல் சிறப்பாக இருக்கும். செயல்களில் நிபுணர்களின் ஆலோசனை தக்கசமயத்தில் கைகொடுக்கும். எடுத்த காரியங்களை எப்பாடுபட்டாவது முடிக்க துணிவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உணர்ச்சிவசப்படுவது இழப்பையே தரும் என்பதை உணர்வீர்கள். மன குழப்பங்களிலிருந்து விடுபட தியானம் உள்ளிட்டவைகளை மேற்கொள்வீர்கள். சாதகமான காலம் விரைவில் வரும் என்று நம்பிக்கை கொள்வீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
கேட்ட இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவார்கள். உங்களது பேச்சு மற்றவர்களின் மனதை கவரும் வகையில் இருக்கும்.நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
மகிழ்ச்சியான நாள். எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடுவீர்கள். திட்டமிட்ட செயல்களில் வெற்றியை தன்வசமாக்குவீர்கள். விபத்துகளில் சிக்கும் வாய்ப்பு இருப்பதால், வாகன பயணத்தில் கவனம் அவசியம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
கிரகங்கள் சாதகமாக இருப்பதால், எண்ணிய காரியங்கள் நடந்தேறும். நண்பர்களால் மகிழ்ச்சியடைவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
சமூகத்தில் நன்மதிப்பு ஏற்படும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். வெற்றிக்காக திட்டமி்டடு செயல்படுவீர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.