Advertisment

Rasi Palan 5th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 5th July Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 5th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan 5th July: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 5th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 5th July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 5, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்களுக்கான நாள் இன்று இல்லை எனலாம். யாரிடமும் வீண் வம்பு செய்யாமல் உங்கள் வேலையை மட்டும் பார்த்தால் உங்களுக்கு நல்லது. அதேபோல், பணத்தை முடிந்த அளவுக்கு சேமித்து வைக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில், உங்களுக்கான கிரக நிலைகளில் சில சிக்கல்கள் உள்ளது. கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருங்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கடினமான தருணங்கள் இன்று உங்களை அர்ச்சனை செய்யும். கடனை திரும்ப செலுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். வரவேண்டிய இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் சிக்கல் உருவாகும். அதனை சட்ட ரீதியாக அனுபவிக்க வேண்டிய நிலைமையும் உருவாகலாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கும். சளித் தொல்லை நீங்கும். பணியிடத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்வீர்கள். அதனால், உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

இன்று வெற்றிகரமான நாள் உங்களுக்கு. உங்கள் இலக்குகளை நோக்கி தெளிவாக பயணிப்பீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு உருவாகும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

செயலில் தாமதம் உங்களுக்கான முன்னேற்றத்தைத் தடுக்கும். உங்களுடைய மன நிம்மதிக்காக வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தீர்கள் எனில், உங்கள் குடும்பம் அதனால் பாதிக்கப்படும். உங்களை நம்பி ஒரு குடும்பம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உடல்நலனில் அக்கறை வேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள ஏதாவதொரு கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. உணவில் கட்டுப்பாடு தேவை. கவனமாக இருக்க வேண்டிய நாள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

விலாவாரியாக எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருக்காமல், உங்கள் பணியை மட்டும் கவனியுங்கள். அரசுப் பணிகளுக்கு தயார் ஆகுபவர்கள், இன்று மறக்காமல் சிறிது நேரமாவது படித்தால் நல்லது. வெற்றி வந்து சேரும் நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

பழைய உடையை இன்று உடுத்த வேண்டாம். திருமணம் தொடர்பான தேடுதல் படலத்தில் நல்ல செய்தி கிடைக்கும். உடல்நலம் மேலோங்கும். சிக்கல்கள் குறையும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

பொய் சொல்வதை தவிர்க்கவும். கிரகங்கள் உங்களுக்கு எதிராக இருப்பதால், சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. வாயுப் பிரச்சனை அதிகமாகும். அமைதியை கடைபிடியுங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வெளிநாடு வாய்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது. காதலில் நல்ல பதிலை எதிர்பார்க்கலாம். வெற்றி எனும் தேவதை இன்று உங்களுடன் இருக்க விரும்புகிறாள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

செலவு கையைச் சுடும். உங்கள் திறமையான நிர்வாகத்தால் அதனை சமாளிப்பீர்கள். முப்பாட்டன் முருகனை மனதில் நினைத்து காரியங்களில் ஈடுபடுங்கள். வெற்றி நிச்சயம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நண்பர்களின் ஆலோசனைக் கேட்டு நடக்க வேண்டும். திட்டம் போட்டு செலவுகளை சமாளியுங்கள். ஆடம்பரத்தை சற்று ஒதுக்கி வையுங்கள். எண்ணெய் சார்ந்த பலகாரங்களை இன்று ஒதுக்கினால் நல்லது.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment