Advertisment

Rasi Palan 5th June: இன்றைய ராசிபலன், வெற்றி தேவதை உங்கள் பக்கம்!

Rasi Palan Today, 5th June Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 5th June: இன்றைய ராசிபலன்

Rasi Palan 5th June: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 5th June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 5th June 2019 : இன்றைய ராசி பலன், ஜூன் 5, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

பொதுவாக ஜோதிடத்தை பெரிதாக நம்பாத மேஷ ராசிக்காரர்களுக்கு, மீண்டும் ஒரு சோதனையான நாள் இன்று. செயல்களில் கலவையான விமர்சனங்களை பெறுவீர்கள். எதற்காகவும் உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். உங்கள் துணை உங்களை தொழில் ரீதியில் முந்த நினைத்தாலும் அனுமதியுங்கள். இல்லையெனில், குடும்பத்தில் நிம்மதி இருக்காது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

ஏதுவான சூழ்நிலை பார்த்து காய்களை நகர்த்துவீர்கள். சட்டரீதியான சில சிக்கல்களை சந்திப்பீர்கள். சிக்கலான இடங்களை விற்க நேரிடும் போது அதிக கவனம் தேவை. என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து களத்தில் இறங்குங்கள். சுமாரான நாள் இன்று.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சில கடினமான சூழ்நிலைகளை இன்று சந்திக்க வேண்டியிருக்கும். ஆற்றலுடன் செயல்பட்டும் தோல்வியை கடந்து செல்வீர்கள். திருப்பி பதிலடி கொடுக்க அதிக திறனுடன் செயலாற்ற வேண்டும். சில முறை தவறான புரிதலுடன் நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களை பலிகடா ஆக்காதீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

சிறப்பான காலக்கட்டம் இது. இருப்பினும், உங்களைச் சுற்றியுள்ள நெகட்டிவ் சூழியலை தகர்த்து பாஸிட்டிவ் சூழியலுக்கு நுழைய வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கிறது. புரியும்படி சொல்ல வேண்டுமெனில், மனக் கட்டுப்பாடின்றி நீங்கள் செய்யும் பல வேலைகளுக்கு இன்னல்கள் அனுபவிக்க நேரிடும். ஆகையால், மனக்கட்டுப்பாடோடு இருங்கள், வெற்றி தேவதை உங்கள் பக்கம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

வீட்டையும் குடும்பத்தையும் பற்றியே சிந்தனை இருக்கும். கேள்விகளின் தருணம் முக்கியமானது தான். ஆனால், உணர்வுகள் அசுத்தமாகவும் வரையறுக்க கடினமாக இருக்கும் போதும், பதில் கிடைப்பது சிரமம் ஆகிறது. பணியிடத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவும். சுமாரான நாள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

விமர்சனங்களை பாராட்டுகளாக மாற்றுவீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு எல்லா செயலிலும் அலுகூலத்தைக் கொடுக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். கற்பனையில் மிதந்து நேரத்தை வீணடித்த நிலை சற்று மாறும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மகிழ்ச்சியான நாள் இது. தன்னம்பிக்கை மேலோங்கி காணப்படும். செலவுகள் ஏற்பட்டாலும், அதனை சமாளிக்கக் கூடிய அளவிற்கே இருக்கும். பிள்ளைகள் உடல் நலன் மேம்படும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உஷாராக இருக்க வேண்டிய நாள். உங்கள் இலக்குகளை அடைய போராட வேண்டியிருக்கும். பொறுமையும் அமைதியும் தேவை. வெற்றிக்கான நாள் வெகு தொலைவில் இல்லை. நிதிநிலைமை கையை சுடும். அதிலும் கவனம் தேவை.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், விரைவில் அந்த நிலை மாறும். வரவேண்டிய கடன்கள் திரும்ப வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் உடல்நலத்தில் அக்கறை தேவை.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இதனால், கடினமான பணிகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். யாருக்காகவும் மற்றவர்களிடம் வாக்கு கொடுக்க வேண்டாம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

வெற்றி தான் உங்கள் இலக்கு. அதற்காக எப்பேற்பட்ட தடைகள் வந்தாலும் உடைத்தெறியும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். பெரிதாக வெற்றி கிட்டவில்லை என்றாலும், சோடை போக மாட்டீர்கள். குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

பொறுமை தேவை. பண வரவில் சுணக்கம் இருந்தாலும், அதை சமாளிக்கும் வாய்ப்புகள் இந்த தினத்தில் கிடைக்கும். குடும்ப ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பணி நிமித்தம் அழுத்தம் இருந்தாலும், குடும்பத்தை கவனியுங்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment