Advertisment

Rasi Palan 5th March 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 5th March 2020: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 5th March 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 5th March 2020: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 5th March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...

Rasi Palan 5th March 2020 : இன்றைய ராசி பலன், மார்ச் 5, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

கடந்தகால நிகழ்வுகளால், புதிய அனுபவங்களை பெறுவீர்கள். வார்த்தைகளில் கவனம் அவசியம். பணியிடங்களில் சக ஊழியர்கள் நட்புடன் இருப்பார்கள். வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதை உணர்வீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

வெள்ளி கிரகத்தால், உங்களது வேண்டுதல்கள் ஈடேறும். காதல் வயப்படுவீர்கள். எதிர்பார்த்த விவகாரங்களில் வெற்றி கிட்டும். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நட்புக்கு வயதில்லை, வயதில் பெரியவர்களுடன் நட்பு கொண்வு அவரது அனுபவ ஆலோசனைகளை பெறுவீர்கள். மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுநலன் கருதி முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். உங்களின் எல்லைகளை வரையறுத்து வாழ்வது நல்லது. பணிச்சுமை அதிகரிக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கிரகங்களின் சாதகமான பார்வைகளினால் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நேர்மறை எண்ணம் அதிகரிக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

திறமைகள் வெளிப்படும் நாள். எதிர்கால நலனுக்காக முக்கிய முடிவெடுப்பீர்கள். உணவு விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

பிறருக்காக மாற்றங்களை ஏற்க துணிவீர்கள். விவாதங்களை தவிர்ப்பதனால், மன உளைச்சலை தடுக்கலாம். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் கடைபிடிப்பது நல்லது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணியிடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் விவகாரங்களில் பார்ட்னர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். மகிழ்ச்சியான நாள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

எடுத்த முடிவுகளினால் அதிக ஆதாயம் அடைவீர்கள். வாழ்க்கைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். எதிர்காலத்திற்காக திட்டங்களை வகுப்பீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நிதிவிவகாரங்களில் திருப்திகரமான நிலை நிலவும். வாழ்க்கை ஏற்றம் இறக்கம் நிறைந்தது என்பதை உணர்வதால் இழப்புகளை தவிர்க்கலாம். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்களில் அஜாக்கிரதை தவிர்த்தல் நலம். நேர்மறை விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாகன போக்குவரத்தில் அதிக கவனம் அவசியம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மற்றவர்களின் கருத்துகளை செவிமடுத்து கேட்பது நல்லது. உங்களது பிரச்னைகளுக்கு அவர்களின் தீர்வுகள் நிச்சயம் பலனளிக்கும். நிதிவிவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும் நாள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment