Advertisment

Rasi Palan 5th November 2018: இன்றைய ராசிபலன்

Daily Rasi Palan Tamil, Nov 5, 2018: காதலர்களுக்கு இது ஒரு அருமையான நாள். காதல் கைகூடும். குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan Today: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 5th November 2018 in Tamil : கேட்பதை வைத்து எதையும் நம்ப முடியாது. பார்ப்பதை வைத்தும் எதையும் நம்ப முடியாது. பேசுவதை வைத்தும் நம்ப முடியாது. அந்த இறைவன் ஒருவனே அனைத்திற்கும் காரணம். அவனே நம்பிக்கை. அவனை எல்லை.

Rasi Palan 5th November 2018 : இன்றைய ராசி பலன், 5 நவம்பர் 2018

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

வெளிச்சத்தை நோக்கி நகரும் நாள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணியிடங்களில் நல்ல பெயர் கிடைக்கும். வருமானம் ஏற்படும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

எலக்ட்ரிக் சாதனங்களில் ஏதாவது ஒன்று வாங்குவீர்கள். சங்கடங்கள் உங்களை விட்டு அகலும். பால்ய கால நண்பர்களை சந்திக்க நேரிடும். உடல் உபாதைகள் நீங்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சரியான கலவையில் அமையும் தினம் இது. பணியிடங்களில் நன்மதிப்பு கிடைக்கும். மேலதிகாரிகளிடம் நலல் பெயர் பெறுவீர்கள். கடின உழைப்பு உங்களை உயர்த்தும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

வெற்றிகரமான நாள். கிரகங்களின் சாதகமான சூழலால் தொல்லைகள் நீங்கி இன்பம் உண்டாகும். பெற்றோர்களிடம் மதிப்பு பெறுவீர்கள். மேம்போக்கான எண்ணத்தை மாற்றிக் கொண்டால் மேலும் வெற்றிகள் வரிசைக் கட்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

இறைவன் வழிபாடும் அவசியம். அது உங்கள் பாதையை வெற்றிப் பக்கம் திருப்பும். மருத்துவம் தொடர்பாக செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், பெரிதாக கவலை கொள்ள ஒன்றுமில்லை.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உங்களுடைய உறுதியான முயற்சியின் மூலம் இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். இன்று வெற்றியை சந்திப்பீர்கள். உங்கள் முயற்சிகளின் மூலம் பல சாதனைகளைச் செய்வீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

காதலர்களுக்கு இது ஒரு அருமையான நாள். காதல் கைகூடும். குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். உங்கள் இலக்குகளை அடைய போராட வேண்டியிருக்கும். பொறுமையும் அமைதியும் தேவை. பணிகளில் சற்று பின்தங்கியிருப்பீர்கள். இதனால் உங்கள் மேலதிகாரிகளிடத்தில் நல்ல பெயரெடுக்கும் வாய்ப்பை இழப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், விரைவில் அந்த நிலை மாறும். வரவேண்டிய கடன்கள் திரும்ப வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் உடல்நலத்தில் அக்கறை தேவை.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இதனால், கடினமான பணிகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். யாருக்காகவும் மற்றவர்களிடம் வாக்கு கொடுக்க வேண்டாம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

இலக்கை நோக்கி பயனிப்பீர்கள். தடைகள் இருந்தாலும், அதில் வெல்லும் மனப்பக்குவம் இருக்கும். பெரிதாக வெற்றி கிட்டவில்லை என்றாலும், சோடை போக மாட்டீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கவலைகள் விலகும் நேரம். ஊக்குவிப்புகள் அதிகம் கிடைக்கும். தன்னம்பிக்கையை கொஞ்சம் அதிகப்படுத்தினால் வெற்றிகள் வசப்படும். மருத்துவ ரீதியாக செலவுகள் உண்டாகும். ஆரோக்யத்தை பேணி காக்க வேண்டிய நாள்.

Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment