Today Rasi Palan, 6th February 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 6th February 2020: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 6, 2020 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
இன்றைய நாள்
வியாழக்கிழமை பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான நாள். குரு கிரகம் எப்போதும் நன்மையே பயக்கும் என்பதால் பெரும்பாலானோரின் விருப்ப கிரகமாக அது உள்ளது. வியாழக்கிழமையை யாராவது வெறுக்கிறார்கள் என்றால், அவர்கள் தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். குருவை பழிப்பவர்களுக்கு நல்வாழ்க்கை அவ்வளவு எளிதில் அமைந்துவிடாது.
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
கணவர் – மனைவி இடையே ரொமான்ஸ் எண்ணங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்துடன் அன்பும் அதிகரிக்கும் நாள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
ரகசியங்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை கொள்வீர்கள். யாரையும் எளிதில் நம்பவேண்டாம் என்று முடிவு செய்வீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
அரிதான செயல்களையும் அனாசயமாக செய்து முடிப்பீர்கள். நிதி விவகாரங்களில் திருப்தி கிடைக்கும்.குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை முன்னுரிமை அளித்து முடிப்பீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உற்றார் உறவினர்களின் பங்கு குறித்து ஆய்வு செய்வீர்கள். ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை என்பதை உணர்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
மகிழ்ச்சியான நாள். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரங்களிலிருந்து நல்ல தகவல்கள் வரும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
முக்கிய விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். நிதி விவகாரங்களில் திருப்திகரமான நிலை ஏற்படும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் மேற்கொள்வீர்கள். போட்டி, பந்தயங்களில் அதிக ஆர்வம் கொள்வீர்கள்.மற்றவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பது நல்லது.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நீண்டநாள் கனவுகள் நிறைவேறும். உங்களை தவறாக புரிந்து கொண்டவர்களும் மனம்மாறி தங்களை வந்தடைவார்கள். வார்த்தைகளில் நிதானம் தேவைப்படும் நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
கிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். பண சேமிப்பு அபரிமிதமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மனமறிந்து நடப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். வாகன போக்குவரத்தில் அதிக கவனம் அவசியம். போட்டி, பந்தயங்களில் பங்கேற்பீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மனசஞ்சலம் அதிகரிக்கும் நாள். அமைதியினால் எத்தகைய காரியத்தையும் எளிதில் சாதிக்கலாம் என்பதை உணர்வீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
மகிழ்ச்சியான நாள், நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். விருந்து விசேஷங்களில் பங்கேற்பீர்கள். வார்த்தைகளில் நிதானம் அவசியம்