Advertisment

Rasi Palan 6th July 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan july 6th இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 6th July 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 6th July 2020: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 6th July 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 6th July 2020: இன்றைய ராசி பலன், ஜுலை 6, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

கற்பனைக்குதிரையை தட்டிவிடுவீர்கள். மற்றவர்களால் கணிக்க இயலாதபடி இருப்பீர்கள். எதையும் தாங்கும் மனத்திறன் உண்டாகும். மற்றவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

சாதகமான காரியங்கள் நடைபெறும். சமயோசிதமாக சிந்தித்து புதிய வாய்ப்புகளை கைப்பற்றுவீர்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்வீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

செவ்வாய் கிரகத்தின் பார்வையால் நற்பலன்களை பெறுவீர்கள். ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டீர்கள். எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். கட்டுப்பாடுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்வீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

நிதி விவகாரங்களில் அதிருப்தி நிலை நிலவும். வரவுக்கேற்ற செலவு இருக்கும் என்பதால் கவனம் அவசியம். பழைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நல்ல நண்பரை இழந்துவிட்டோமே என்று மனம் வருந்துவீர்கள். பழைய நினைவுகளால் அவதிப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

இரகசியங்களை பாதுகாப்பதில் அதிகம் மெனக்கெடுவீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கிரகங்களின் சாதகமான பார்வையினால் நற்பலன்களை பெறுவீர்கள். வழக்கமான பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். செயல்களில் விழிப்புடன் இருப்பது நல்லது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நற்செயல்களால் மனம் மகிழ்வீர்கள். தொழில்முறை விவகாரங்களில் ஏற்றத்தாழ்வுகள் நிகழும். நட்பு வட்டாரம் விரிவடையும். முக்கிய விவகாரங்களில் நீடிப்பதா வேண்டாமா என்பதில் குழப்பமடைவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

ஒத்த கருத்துடையவர்களுடன் இணக்கமாக செயல்படுவீர்கள். பழைய அனுபவங்களால் புதிய உற்சாகத்தை பெறுவீர்கள். எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்வது நல்லது. எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்களது உழைப்பை அதிகப்படுத்த திட்டமிடுவீர்கள். வழக்கமான பணிகளை நிறுத்திவைப்பீர்கள். மாற்றங்களை எதிர்பார்ப்பீர்கள். ஏமாற்றம் நிகழாமல் பார்த்துக்கொள்ளவும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். உரிமைகளை போராடி பெறுவீர்கள். மற்றவர்களின் வெற்றிக்காக பாடுபடுவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கடினமாக உழைக்க வேண்டிய நாள். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். கடந்ததை எண்ணி வருத்தப்படுவீர்கள். மறைந்திருக்கும் திறமைகள் வெளிப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment