Advertisment

Rasi Palan 6th June: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 6th June Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 6th June: இன்றைய ராசிபலன்

Rasi Palan 6th June: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 6th June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 6th June 2019 : இன்றைய ராசி பலன், ஜூன் 6, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும் தேடி வரும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பேச்சில் ஒரு உற்சாகம் பிறக்கும். சின்ன தடைகள் ஏற்பட்டாலும் அதை கடந்து வருவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

புதிய தொழில் வியாபாரங்களில் பண முதலீடு எதையும் செய்ய வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் விட்டுக்கொடுத்து போனால் சிறப்பு. வயிறு தொடர்பான நோய்கள் வரும் கவனம் தேவை. சேமிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

புத்தியில் குழப்பம் ஏற்படும். மாணவர்கள் உயர்கல்விக்கான படிப்பை தேர்வு செய்யும் முன்பு குழப்பம் இன்றி முடிவு செய்யுங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்களின் யோசனையை கேட்பது நல்லது. சுமாரான நாள் இன்று.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. தைரியம் தன்னம்பிக்கை தேவை. குல தெய்வத்தை சரணடையுங்கள், எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கலாம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நிம்மதியான நாள் இது. யாருக்காவும் உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சரியான முடிவுகளை முன்னெடுத்துச் செல்வீர்கள். உங்கள் தலைமையிலான அணி எங்கு சென்றாலும் வெற்றி வாகை சூடும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் பொழுது, அதனை கெட்டியாக பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். மகிழ்ச்சியான மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படும். உங்களை நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்களின் அதீத திறமையை வெளிக்காட்ட வேண்டிய நேரம் இது. நீண்ட நாள் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதுவே உங்களை நிம்மதியாக வைத்திருக்கும். உடன் இருப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்கள் காமன் சென்ஸ் எந்தளவிற்கு சிறப்பாக வெளிப்படுகிறதோ, அந்தளவிற்கு பேரும், பெருமையும் உங்களை வந்துச் சேரும். இல்லையெனில், தவறான முடிவெடுத்து விட்டோமே என்று, இந்த வாரம் முழுவதும் புலம்பிக் கொண்டிருப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்கள் வழியில் பயணித்தால் வெற்றி உறுதி. உங்கள் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வையுங்கள். உங்கள் தன்னம்பிக்கையே உங்கள் பலம். அதுவே உங்களது வெற்றி.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணுங்கள். உங்களது சில முயற்சிகள் தோல்வியில் முடியலாம். கடினமாக உழைத்தும் தோற்கும் போது தான், இந்த வாழ்க்கையே இப்படித் தான் என்ற சலிப்புத் தோன்றும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்களின் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய நாள் இது. அது உங்கள் வாழ்வை மேன்மையாக்கும். தீயவை உங்கள் அருகில் கூட வராது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

குடும்பத்தை விட்டு சில காலம் பிரிந்திருக்க எண்ணுவீர்கள். ஆனால், அப்பொழுதும் அவர்களிடம் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். ஒற்றுமையாக சில விஷயங்கள் உங்களுக்கு இன்று நடக்கலாம்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment