Today Rasi Palan, 6th November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 6th November 2019: இன்றைய ராசி பலன், நவம்பர் 6, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
நினைத்த காரியம் எதிர்பார்த்தபடி நிறைவேறும். சில விஷயங்கள் புரியாத புதிராக இருக்கும். நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கும். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே புரிதல் இல்லாததால், சில மனக்கசப்பு ஏற்படும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்களது தரத்தை நீங்களாகவே குறைத்துக்கொள்ளாதீர்கள். அரிய வாய்ப்பை தவறவிடும் நிலை ஏற்படும் என்பதால் கவனம். வாகன போக்குவரத்தில் நிதானம் கடைபிடிப்பது நல்லது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
ஜாதக பலன்கள் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள். அது தவறு இல்லை என்றும் சாதிப்பீர்கள். உங்களது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிட்டு செயல்படுவீர்கள். ஒவ்வொரு நகர்வையும் மிக கவனமாக எடுத்து வைப்பீர்கள். முதலில் தோல்வி ஏற்பட்டாலும் மனந்தளராமல், அடுத்தடுத்த அடியை எடுத்து வைப்பீர்கள். மனதிடம் அதிகரிக்கும் நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
நிதிவிவகாரம், பொதுஇடங்கள், பணிசார்ந்த இடங்கள் என எல்லா இடங்களிலும் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பணிகளில் உற்சாகமாக செயல்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
கிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். பயணம் மேற்கொள்வீர்கள். நீண்ட தொலைவு பயணத்துக்கு திட்டமிடுவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால், மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
வெற்றிகரமான நாள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
நண்பர்கள், உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் விஷயங்களை அனாசயமாக செய்து முடிப்பீர்கள். தங்களது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
பணிநெருக்கடிகளால் அல்லோல்படும் நாள். ஒரேநேரத்தில் பலவேலைகளை செய்ய வேண்டியிருப்பதால் மிகுந்த மனச்சோர்வு அடைவீர்கள். மற்றவர்களின் உதவிக்காக காத்திருப்பீர்கள். வேலைப்பளு காரணமாக உணவையும் மறப்பீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மனஅமைதி தேடி அலைவீர்கள். வெளிநிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், சிறிது சந்தோஷம் நிலைத்திருக்கும். பெரிதினும் பெரிது கேள் என்ற சொலவடை மிகவும் பிடிக்கும் என்பதால், காலம் கனியட்டும் என்று காத்திருப்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். தலைமை ஏற்று பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பிப்பீர்கள்.புதுவகை ஐடியாக்களை செயல்படுத்துவீர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.