Today Rasi Palan, 7th March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 7th March 2020 : இன்றைய ராசி பலன், மார்ச் 7, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
விழிப்புடன் இருந்தால் விபத்துகளிலிருந்து தப்பிக்கலாம். கவனக்குறைவினால் பணியிடங்களில் அசவுகரியங்களை சந்திக்கலாம் என்பதால் கவனம் அவசியம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரியமானவர்களிடமிருந்து அதிசய பரிசு வந்து சேரும். தலைமை ஏற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
அதிக விரயம் ஏற்படும் என்பதால், நிதிவிவகாரங்களில் அதிக கவனம் அவசியம். காத்திருந்தால், எந்த விசயங்களிலும் தீர்வு கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
வழக்கத்துக்கு மாறாக அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். பணியிடங்களில் தடைகளை தகர்த்து எறிவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
பயணங்களால் புத்துணர்வு பெறுவீர்கள். ஆன்மிகத்தால் ஆனந்தமடைவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்க இருப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உறவுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம் வேண்டும். பேச்சுவார்த்தைகளினால் எந்த விசயத்திற்கும் தீர்வு பெறலாம் என்பதை உணர்வீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
புதிய நண்பர்களின் வருகையால் உற்சாகம் பெறுவீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
கிரகங்களின் சாதகமான பார்வையினால் திட்டமிட்ட காரியங்கள் எண்ணியபடி ஈடேறும். பயணங்களினால் புத்துணர்வு பெறுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும் என்பதால் கவனம். எந்த செயலையும் நாளைக்கு என்று தள்ளிப்போடுவது நல்லது அல்ல. வாகன போக்குவரத்தில் அதிக கவனம் அவசியம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
மனம் அதிகம் சஞ்சலம் அடையும் என்பதால் மனக்கட்டுப்பாடு அவசியம். எதையும் தீர விசாரிப்பதனால் பல்வேறு இடர்பாடுகளை களையலாம். தவறினால் பிறரிடம் மன்னிப்பு கேட்கும்நிலை ஏற்படும் என்பதால், விழிப்புடன் இருப்பது அவசியம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மகிழ்ச்சியான நாள். பிரியமானவரிடமிருந்து வரும் அழைப்பினால் உற்சாகம் பெறுவீர்கள். மற்றவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வெற்றிப்பாதையில் வீறுநடை போடுவீர்கள். மற்றவர்களை அரவணைத்து செல்வீர்கள். இந்த நாள் இனிமையான நாள் என்பதை உணர்வீர்கள், விருந்து விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.