Today Rasi Palan, 7th September 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 7th September 2020: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 7, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
தொழில் விவகாரங்களில் திருப்தி நிலவும். அதிக முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். புதிய இலக்குகளை நோக்கி முன்னேறுவீர்கள். யதார்த்தத்தை உணர்வீர்கள். புது உத்வேகம் பிறக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் அவச்சொற்களிலிருந்து தப்பிக்கலாம். எதை விதைத்தோமா அதைத்தான் அறுவடை செய்ய முடியும் என்பதை உணர்வீர்கள். வதந்திகளை புறந்தள்ளுவீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
ஏமாற்றங்களை தவிர்க்க எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளுங்கள், பிரியமானவர்களின் அன்பு அதிகரிக்கும். ஓய்வு தேவைப்படும் நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
மகிழ்ச்சியான நாள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
செய்வனவற்றை திருந்த செய்வீர்கள். வழக்கமான பணிகளில் மாற்றங்களை மேற்கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடிவரும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
தொழில் விவகாரங்களில் அதிக கண்காணிப்பு தேவை. மனதில் புதுஉத்வேகம் பிறக்கும். வெற்றி இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடங்களில் நற்பெயர் கிடைக்கும். புதிய பாதையில் வீறுநடை போடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
நிதிவிவகாரங்களில் அதிக கவனம் வேண்டும். முடிவு எடுப்பதற்கு முன் பலரிடம் ஆலோசனை கேட்பது உத்தமம். கணிப்பு பொய்யாகும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
ரொமான்ஸ் எண்ணம் அதிகரிக்கும். அதிகம் உணர்ச்சிவசப்பட நேரிடும். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். தேவையானவற்றுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பீர்கள். அகலக்கால் வைப்பதை தவிர்க்க வேண்டும். குழப்பநிலையில் இருப்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
அவசர ஆ,லோசனையில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களின் கருத்துகளை ஏற்பீர்கள். புதிய விவகாரங்களுக்கு தலைமை ஏற்பீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook
Web Title:Rasi palan 7th september
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்