Advertisment

Rasi Palan 8th November 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 8th November Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 8th November 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 8th November 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 8th November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 8th November 2019: இன்றைய ராசி பலன், நவம்பர் 8, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நீங்கள் அதன் மகத்துவத்தை மற்றவர்களுக்கும் வலியுறுத்துவீர்கள். எது சரி எது தவறு என்பதை ஆராய்ந்து உணர்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

பிரியமானவர்களுடன் பேசி பொழுதை இனிமையாக கழிப்பீர்கள். உங்கள் கருத்தை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பு இருப்பதால், வார்த்தைகளில் நிதானம் கடைபிடிப்பது அவசியம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

ஷாப்பிங் செய்வீர்கள். அதன்காரணமாக மனஅமைதி ஏற்படுவதை உணர்வீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கடன்களை அடைப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பணியிடங்களில் மதிப்பு அதிகரிக்கும். அங்கீகாரம் கிடைக்கும். சந்தோஷமாக உணர்வீர்கள். பெரிய பெரிய ஐடியாக்களை நடைமுறைப்படுத்த முனைவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

எண்ணிய காரியங்கள் நினைத்தபடி நடக்கும். எதையும் சிறப்பாக செய்யவேண்டும் என்பதற்காக அதிகம் மெனக்கெடுவீர்கள். புதிய நட்புகள் கிடைக்கும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மன திடத்துடன் இருப்பீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் செயல்களை அனாசயமாக செய்து முடிப்பீர்கள். ரொமான்ஸ் விசயங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

முக்கிய நண்பர்களை சந்திப்பீர்கள். அவரது சந்திப்பினால், வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை எதிர்கொள்வீர்கள். யதார்த்த நடவடிக்கைகளுக்காக பலரை ஒதுக்கும் நிலை ஏற்படும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது தான் வாழ்க்கை என்பதை உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் கோபம் வரும்படி நடந்துகொள்வர் என்பதால், வார்த்தைகளில் நிதானம் காப்பது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

தொழில்முறை விவகாரங்கள் திருப்தியளிக்கும். நிதிவிவகாரங்களில் வெற்றி கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

திருமண முயற்சிகள் பலிதமாகும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன போக்குவரத்தில் அதிக கவனம் தேவை.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

ஆடம்பரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். யதார்த்த வாழ்க்கையிலிருந்து விலகி செல்வீர்கள். புதுவித அனுபவங்கள் ஏற்படும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment