Advertisment

Rasi Palan 7th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 7th August Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 7th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan 7th August: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 7th August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 7th August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 7, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

கடந்தகாலங்களில் இழந்தவற்றை சிறிதுசிறிதாக திரும்ப பெறுவீர்கள். யாருடைய கருத்தையும் காதில் வாங்கிக்கொள்ளமாட்டீர்கள். நல்ல விசயங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நிதி விவகாரங்களில் அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். எடுத்த காரியத்தை முடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நட்புக்குள் எதிர்பாராத திருப்பங்கள் நிகழும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

எதிர்பாலினத்தினருடன் கருத்து வேறுபாடு தோன்றும். தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவீர்கள். சரியான முடிவு எடுப்பீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

முன்னேற்றத்திற்காக ஓய்வெடுக்காமல் உழைப்பீர்கள். உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும் என்று தீர்மானமாக இருப்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நல்லவை, கெட்டவை கலந்த நாள். அனுபவத்தின் மூலம் பல விசயங்களை அறிந்துகொள்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்துசெயல்படுவது நல்லது. மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கிரகங்கள் சாதகமாக இருப்பதால், தீட்டிய திட்டங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். ஆச்சரியம் ஒன்று உங்களுக்காக காத்திருக்கிறது. இயற்கையின் ரகசியத்தை அறிய முற்படுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள். மற்றவர்களின் ஆலோசனை தக்க சமயங்களில் கைகொடுக்கும் என்பதை உணரும் தருணமிது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நிதி விவகாரங்களில் விழிப்புடன் இருக்கவேண்டும். சிறிது அசந்தாலும் அதிக பாதிப்பு உங்களுக்குத்தான். இடர்பாடுகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். நிதானமாக யோசித்து தீர்க்கமான முடிவுகளை எடுங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்களது கருத்துகளை மற்றவர்களிடம் திணிப்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களை முதல் முயற்சியிலேயே ஆச்சரியப்படுத்துவீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

கடந்த கால தவறுகளுக்கு நண்பர்கள் மன்னிப்பு தெரிவிப்பார்கள். ஆனால் நீங்கள் அதனை உதாசீனப்படுத்துவீர்கள். பணப்பிரச்னை உங்களை வாட்டும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

முன்கோபம் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை குற்றம் சொல்லி எதுவும் ஆகப்போவதில்லை என்பதை உணர்வீர்கள். மற்றவர்கள் உங்களை பயன்படுத்திக்கொள்வர்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment