Advertisment

Rasi Palan 8th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 8th August Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 8th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan 8th August: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 8th August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 8th August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 8, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

அவசரம் வேண்டாம். நிதான முயற்சியே வெற்றியை தரும். அமைதியாக இருந்தால், உலகையே தங்கள் வசமாக்கிவிடுவீர்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மற்றவர்களை தவறாக புரிந்துகொண்டதன் மூலம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவீர்கள். தன்னிலையை நீங்கள் உணர வேண்டும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சவாலான விசயங்களே உங்களை உலகிற்கு காட்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால், எளிதாக சாதித்து காட்டுவீர்கள். வாகன பழுதுகளை அவ்வப்போது நீக்கிக்கொள்வது நலம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அனுபவ அறிவின் மூலம் முக்கிய விசயங்களில் சிறந்த முடிவை எடுப்பீர்கள். நாம் தான் உலகை தாங்கிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை முதலில் விட்டொழியுங்கள்

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கிரகங்களின் பார்வையால் ஆனந்தமாக இருப்பீர்கள். இதுமாறும்நேரம் ஆதலால், சற்று எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். உணர்ச்சிவசப்படாதீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை முதலில் நிறைவேற்றுங்கள். அவர்களிடம் நன்மதிப்பு பெறுங்கள். அடுத்தடுத்த நகர்வுகளுக்கு இது உங்களுக்கு உதவும்.வீட்டை அலங்கரிக்க பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நிதி விவகாரங்களில் குழுவோடு இணைந்து செயல்படுவது நல்ல பலனை தரும். முக்கியமான விசயங்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடியாக செயல்படுவது இழப்பை தடுக்கும்.

.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

அதிகம் உணர்ச்சிவசப்படுவதே உங்களது மிகப்பெரிய பலவீனம். அதை விட்டொழித்தால் பல்வேறு நற்பலன்களை அடையலாம். பங்குதாரர்கள் உங்களை தரம்தாழ்த்தி பேசுவர்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உணர்ச்சிகரமான சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. தங்கள் பேச்சை காதுகொடுத்து பலர் கேட்பர். பிரச்னைகளை எப்படி சரிசெய்வது என்பதை தீர்மானிப்பதில் வல்லவர்களாக இருப்பர்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பிரியமானவர்களின் அன்புக்காக ஏங்குவீர்கள். விரைவில் அது கிடைக்கும். நீங்கள் யார் என்பதை உணர்வீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

மனதில் உள்ள குப்பைகளே மன சஞ்சலத்திற்கு காரணம் என்பதை உணர்வீர்கள். தொழில் மற்றும் பணி சார்ந்த வாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் கனவு நனவாக விரயம் செய்ய வேண்டியிருக்கும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

சிறந்த நாள். கடந்த கால இடர்பாடுகளின் மூலம், தடைக்கற்களை எவ்வாறு படிக்கற்களாக மாற்றிக்கொள்வது என்பதை அறிந்திருப்பீர்கள். மகிழ்ச்சிக்கான நாள் இது, கொண்டாடுங்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment