Advertisment

Rasi Palan 2nd March 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 2nd March 2020: தேக்கநிலை நீடித்தால் கவலை வேண்டாம். விரைவில் அனைத்தும் நலம் பெறும். உங்களுக்காக நிமிடங்களும், நொடிகளும் வரிசைக்கட்டி வந்து கொண்டிருக்கின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 2nd March 2020: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 2nd March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 2nd March 2020 : இன்றைய ராசி பலன், மார்ச் 2, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் தான் உழைக்க வேண்டுமே தவிர, வேறொவர் விண்ணில் இருந்து வந்து உங்களுக்கு வெற்றிக் கதவுகளை திறந்துவிட மாட்டார் என்பதை நினைவில் கொள்க. உங்கள் மன ஓட்டங்களை புரிந்து கொண்டு செயல்படுபவரோடு நீங்கள் இணைந்து பயணித்தால் அதுவே உங்களுக்கு பயன் தரும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

யாருக்காகவும் உங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்க வேண்டாம். அதேசமயம், உங்கள் முன்னேற்றத்திற்கு உதவியவர்களை மறத்தல் ஆகாது. பெற்றோர்களின் எண்ணம் போல் செயல்படுவீர்கள். மனைவிடம் வாக்குவாதம் வேண்டாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

திருமணம் யோகம் கைக்கூடும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வளவு நாள் உங்களுக்கு கிடைத்து வந்த ஆதரவு விலகலாம். சில தவிர்க்க முடியாத சங்கடங்களை அனுபவிக்க நேரிடும். கேஷுவல் என்ற மனநிலையை மாற்றி செயல்படுவது உங்கள் வளர்ச்சிக்கு நல்லது.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மற்றவர்களை பற்றி அதிகம் சிந்திக்காமல் உங்கள் பயணத்தை மட்டும் உற்று நோக்குங்கள். மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற கூச்சம் இருக்கும் வரை, தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கும். வெற்றிகள் இனி வசப்படும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உடல்நிலையில் அதிக கவனம் தேவை,. சில முயற்சிகள் வெற்றிகளைக் கொடுக்கும். முயலாமல் இருக்க வேண்டாம். சேமிப்புகள் கரையும். கவலை வேண்டாம். இந்த நிமிடம் எது முக்கியம் என்று அறிந்து செயல்படுங்கள் போதும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நண்பர்களின் ஆலோசனைகளை அப்படியே ஏற்பது எந்தளவுக்கு உங்களுக்கு உதவுகிறது என்பதை பகுத்தறிந்து செயல்படுவது நல்லது. நிதி நிலைமை ஓரளவுக்கு நிதானமாக இருக்கும். கடன் குறையவில்லை என்றாலும், கூடாது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

தேவைகள் விட கூடுதலாக அன்பு உங்களைச் சுற்றி இருக்கும். அது உங்களை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்த உதவும். கைவிட்டு போன சொத்து உங்களிடம் வந்து சேரும். இன்று நிதானமாக செயல்படுவது மிகவும் நல்லது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

இன்று நீங்கள் உணர்சிப்பூர்வமாகப் பேசுவீர்கள். இதனை தவிர்ப்பதன் மூலம் பாதகமான சூழ்நிலை ஏற்படாமல் இருக்கும். அதிக பொறுப்புகள் காரணமாக பணப்பற்றாக்குறை காணப்படும். எனவே செலவுகளை சமாளிப்பதை கடினமாக இருக்கும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்கள் பணிகளை எளிதில் முடிப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குறித்த நேரத்திற்கு முன்பே உங்கள் பணிகளை முடித்து விடுவீர்கள். இதனாலேயே இந்த நாள் மிகவும் போரிங்காக இருப்பது போல உணருவீற்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் உங்கள் பணிகளை திறமையாக முடிப்பீர்கள். உங்களை சிலர் கவருவார்கள். மனதில் ஆசைகள் வந்து போகும் நாள். அந்த நபரிடம் சென்று உங்கள் விருப்பத்தை தெரிவிக்க முயற்சி செய்து வேண்டாம் என்று நீங்களே விலகுவீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக இருக்காது. நீங்கள் உணர்ச்சிவசப்ப்டுவீர்கள். இன்று வெற்றி பெறுவதற்கு அமைதியான கட்டுப்படாடான அணுகுமுறை தேவை. உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள் வெளிப்படும் நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

சில ஏமாற்றங்கள் காணப்படும். சவாலான சூழ்நிலைகளை எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி தைரியமாகக் கையாள வேண்டும். சக பணியாளர்களிடம் மனக் கசப்புகள் வரும். அதிகப்படியான பணிகள் கவலையை அளிக்கும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment