Advertisment

Rasi Palan 1st July: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 1st July Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 1st July: இன்றைய ராசிபலன்

Rasi Palan 1st July: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 1st July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 1st July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 1, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

சரமாரியாக கேள்விகளைக் கேட்பீர்கள். ஆனால், சம்பந்தமே இல்லாமல் கேட்பீர்கள். உங்கள் நூதன மூளை நன்றாக தான் வேலை செய்கிறது. ஆனால், ரிசல்ட்டில் தான் பிரச்சனை. கவலை வேண்டாம், கூடிய விரைவில் நிறங்கள் மாறும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களின் உழைப்புக்கு இன்று மரியாதை கிடைக்கும் நாள். பல முறை நீங்க எதிர்பார்த்து ஏங்கிய ஒன்று, இன்று உங்கள் கைகளில் தவழும். வெற்றிக்கான சூத்திரம் உங்களை முழுமையாக ஆக்கிரமிக்க தொடங்கி இருக்கிறது. ஆகையால், இனி டென்ஷன் வேண்டாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்கள் வசீகரமான தோற்றம், எதிராளியையும் ஒரு நொடி யோசிக்க வைக்கும். நிதானமாக இன்று முடிவுகளை எடுப்பீர்கள். அடம் பிடிப்பது மட்டுமே, உங்களை சுற்றி இருப்போரை எரிச்சல் அடைய வைக்கும் ஒன்றாகும். மாற்றிக் கொள்ளுங்களேன்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

சரமாரியாக வெற்றிகளை குவிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். மனைவி, பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். கடின உழைப்பு மூலம், வருமான ஈட்டுவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

ஏன், எதற்கு என்று கேள்வி எழுப்புவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு, மாதத்தின் முதல் நாளான இன்று சற்று சோதனைகள் காத்திருக்கிறது. உங்களுக்கென்று ஒதுக்கியுள்ள பணிகளை முடித்துவிடுங்கள். தள்ளிப் போட வேண்டாம். ஆஞ்சநேயரை வழிப்பட்டு இன்றைய நாளை துவங்குங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உங்களுக்கான நாள் இன்று. கல்வித் தரம் மேம்படும். தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவீர்கள். உங்களுக்கான ஆதரவு அதிகரிக்கும். பெற்றோர்களுடன் நல்ல பெயர் வாங்குவீர்கள். காதல் கூட கைக்கூடும். மீண்டும் சொல்கிறேன், உங்களுக்கான நாள் இன்று.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

காலச் சூழலுக்கு தகுந்தாற் போல், தகவமைத்துக் கொள்வதில், உங்களைவிட சிறந்தவர் வரும் இருக்க முடியாது. எக்ஸ்பெர்ட் என்றாலும், யானைக்கு அடி சறுக்கும் அல்லவா. ஆகையால், இன்று கொஞ்சம் நிதானத்துடன் செயல்பட முயற்சி செய்யுங்கள். கவனத்துடன் செயல்படுங்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்களுக்கான வெற்றியை யாருக்காகவும் விட்டுத் தர மாட்டீர்கள். அதேபோல், தோல்வியையும் முன்வந்து பொறுப்பேற்றுக் கொள்வீர்கள். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமான இருப்பதால், இன்று வெற்றியை மட்டுமே சுவைப்பீர்கள். குடும்பத்தில் நிலவிய சுணக்கம் மாறும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். தலைவலு, வயிற்றுவலி என்று ஏதாவது ஒன்றை அனுபவித்துக் கொண்டே இருப்பீர்கள். உங்களின் ஒவ்வொரு செயலும், நீங்கள் நிர்ணயித்திருக்கும் தரத்தோடு முடிவடையும் என்பது நிச்சயம் உங்களுக்கு ஆறுதலான செய்தி தானே.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்கள் அமைப்புக்கு கொஞ்சம் கடவுள் வழிபாடு அவசியமாகிறது. உங்கள் வீட்டின் அருகே உள்ள ஏதோ ஒரு கோயிலுக்கு தினம் செல்வதை வாடிக்கையாகக் கொள்ளுங்கள். இல்லையேல், காக்கைக்கு சோறு வையுங்கள். உங்களை சுற்றும் சனி விலகும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பணியிடத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். சராசரியான வேலைகளும், பெரியளவில் கொண்டாடப்படும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிட்டும். உங்கள் நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டுக் கொள்ளுங்கள், ஆனால், முடிவு உங்களுடையதாக இருக்கட்டும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

எவ்வளவு கடினமான பணியாக இருந்தாலும், அதனை சுலபமாக முடித்துக் கொடுப்பீர்கள். அந்த வேகமும், விவேகமும் கலந்த பணி சூட்சமம் இன்று கைக்கூடும். நீங்களாக வாய்ப்பை தேடி போக வேண்டியதில்லை. அதுவாகவே வந்து சேரும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment