Rasi Palan 2nd November October 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 2nd November 2021: இன்றைய ராசி பலன், நவம்பர் 2ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
நீங்கள் விரைவில் உங்களுடைய சில திட்டங்கள் அற்பமானவை என்ற முடிவுக்கு வரலாம். ஆனால், நேர்மையாக, அது முக்கியமானதா என்பதை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். அதற்கு பதில் அநேகமாக இல்லை என்பதுதான். உண்மையில், உங்கள் திறனுக்கு அப்பாற்பட்ட நோக்கங்களுக்காக பாடுபடுவதன் மூலம் உங்கள் வரம்புகளை எதிர்காலத்திற்கான சிறந்த விளைவுகளுடன் வரையறுப்பீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
ரிஷப ராசிக்காரர்களே இப்போது வேலையிலும் பொது பொறுப்புகளில் செயல்பாடுகளில் திரும்ப முடியாத நிலையை அடைந்துவிட்டீர்கள். அனைத்து லட்சியவாத ரிஷப ராசிக்காரர்களும் நான் ஒரு ஆலோசனை உங்களால் வெற்றி பெற முடியும். ஆனால், நீங்கள் உங்களுக்குத் தெரிந்த வேலைகளில் மட்டுமே போராட வேண்டும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
நீங்கள் சமீபத்தில் சில கவர்ச்சிகரமான தனிப்பட்ட காலகட்டங்களை அனுபவித்து வருகிறீர்கள். இருப்பினும் வாழ்க்கையில் உங்களுடைய உண்மையான ஆசீர்வாதம் என்பது புகழ், அதிர்ஷ்டத்தைக் காட்டிலும் மிகவும் மதிப்புமிக்கவை நீடித்தவை என்பதை நீங்கள் பாராட்டத் தொடங்குவீர்கள். உங்களுக்கு ஆதரவாக நின்ற நண்பர்கள், உங்களின் மிகப்பெரிய பொக்கிஷம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
இன்று ஆசைகள் அதிகமாக இருக்கும். பலர் நேரடி மோதல்களில் ஈடுபடுவார்கள், ஆனால் நீங்கள் கடினமான கிரக ஆற்றல்களை உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் நிதி விவகாரங்கள் தொடர்பான கணிப்புகளை தவிர்ப்பது நல்லது. சிலர் தங்கள் நோக்கங்களைப் பற்றி தெளிவாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
சில கூட்டாளிகள் மற்றும் நெருக்கமாக இணைந்திருப்பவர்கள் இன்னும் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றுகிறது. இவர்கள் தங்கள் திறனைப் பயன்படுத்துவதில் தனித்தனியாகத் தவறிவிட்டதாகத் தெரிகிறது. அவர்களின் புலம்பல்களைக் கேட்பதற்குப் பதிலாக, நீங்கள் அவர்களுக்கு சில நடைமுறை ஊக்கத்தை அளிக்க முயற்சிக்கலாம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
நீங்கள் மிகவும் கவலையாக இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பத்து வரை எண்ண முயற்சி செய்யுங்கள். உங்கள் காதல் நட்சத்திரங்கள் சூழ்ச்சி, மர்மம் மற்றும் குழப்பம் மற்றும் கடந்த காலத்தின் இனிமையான நினைவுகளை கொண்டு வர வாய்ப்புள்ளது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
நீங்கள் செய்வதற்கு சில நுட்பமான தேர்வுகள் உள்ளன. நீங்கள் யாரை நம்பலாம் என்பதையும் அவர்களின் இடத்தில் யாரை வைத்திருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் வழக்கமாக அறிந்திருக்கிறீர்கள். எல்லா சூழ்நிலைகளையும் நன்கு அறிந்திருந்தால் தவிர, பொது அல்லது தொழில்முறை விஷயங்களில் உங்கள் தீர்ப்பை மக்கள் பாதிக்க அனுமதிக்காதீர்கள். இல்லையெனில், நீங்கள் தவறான ஆலோசனையைப் பெற வேண்டியிருக்கும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
புளூட்டோவுடன் செவ்வாய் கிரகம் ஒரு பெரிய உரசலை அமைப்பதால், ஒரு அதிர்ச்சி அல்லது மோதல் நடைபெற உள்ளது. இருப்பினும், இது சூழ்நிலையை தெளிவாக்குவதற்கான ஒரு நல்ல நடவடிக்கையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் மனதில் இருந்து புகார்களைப் பெற அனுமதிக்கிறது. அனேகமாக புகார் சொல்பவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
இப்போது எல்லா பிரச்னைகளையும் விட்டுவிடுங்கள். வீட்டு பிரச்னைகளை ஒரு பக்கம் ஒதுக்கி வையுங்கள். நீங்கள் ஒரு சில தாழ்வுகளை உள்ளடக்கிய ஒரு கட்டத்தில் நுழைகிறீர்கள். ஆனால், அது பொதுவாக வழக்கத்தை விட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். நீங்கள் மிகவும் தனிமையில் இருப்பதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் உங்களை புரிந்துகொள்வார்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
உங்கள் தனிப்பட்ட நலன்களுக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் நலன்களுக்கும் இடையில் நீங்கள் சமநிலையை கண்டறிந்தால், நீங்கள் மகிழ்ச்சியானவராக இருப்பீர்கள். குறைந்த பட்சம் நீங்கள் இப்போது காதலர்கள், வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் நீங்கள் நெருக்கமாக ஈடுபடும் எவருடனும் சிறந்த சமநிலையை அடைய முடியும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
ஒரு ராசி மண்டல சாகசம் ஆரம்பமாகிறது. இருப்பினும் உங்களைச் செயலுக்குள் தள்ளுவதற்கு ஏதாவது ஒரு தொடக்கம் தேவைப்படலாம். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருங்கள். சில காரணங்களால் அதிகாரத்தில் உள்ள சில நபர்கள் ஒரு மோசமான மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
இன்றைய கிரக சீரமைப்பு உங்கள் குணத்தின் ஆழமான, தீவிரமான மற்றும் பாதுகாப்பான ஒரு பக்கத்தை வெளிப்படுத்துகிறது. நீங்கள் உங்கள் ஆற்றல்களை சாதகமான திசையில் செலுத்தலாம். உங்கள் ஆன்மீக விழுமியங்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம். உண்மைக்கு அதிக முன்னுரிமை கொடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“