Rasi Palan April 19th 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 19th April 2021: இன்றைய ராசி பலன், ஏப்ரல் 19ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
திங்கள் கிழமை காலை வலியால் முனுமுனுப்புகள் இல்லை. உங்கள் வேலை மற்றும் படைப்பாற்றல் வீடுகள் மீது வியாழனின் தாராளமாக இருக்கிறது. அது நம்பிக்கையான உறவு கிரகமான யுரேனஸின் பொதுவான ஆச்சரியமான இயக்கங்களால் வலுப்படுத்தப்படுகிறது. உங்களுக்கும், கூட்டாளிகளுக்கும் நீண்டகால வாய்ப்புகள் மிகச் சிறப்பாக இருக்கிறது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
எதுவும் கருப்பு அல்லது வெள்ளை என முற்றிலும் சாதகமானதோ அல்லது எதிரானதோ அல்ல. ஒரு அறம் சார்ந்த அல்லது தார்மீக ரீதியான கேள்வி மிக விரைவில் எழுப்பப்படலாம். உங்கள் நலன்களை தியாகம் செய்வது அவசியமில்லை; வேறு யாரும் அவ்வாறு தியாகம் செய்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. வெளிநாட்டுப் பயணம் உங்களை அழைக்கலாம். ஆனால், நீங்கள் கனவு காண்பதற்கு விஷயம் இருக்கலாம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
ஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில் புதன் உங்கள் கிரக ஆட்சியாளரும் இயல்பான கூட்டாளியுமான புதன் உங்கள் ராசியுடன் ஒரு வியத்தகு உறவுக்கு மாறுகிறது. உண்மையில், நீங்கள் கழித்த கடந்த பதினொரு மாதங்களை புறக்கணித்துவிட்டு நீங்கள் அனைத்தையும் கவனித்து எழுந்து உட்கார ஆரம்பிப்பீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
சில நேரங்களில் மக்களின் தேர்வு என்ன என்பது கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. மேலும் கூட்டாளிகள் முற்றிலும் குழப்பமடைவார்களா அல்லது முற்றிலும் ஈர்க்கப்பட்டார்களா என்பதை அளவிடுவது கடினம். ஒருவேளை இது நீங்கள் மட்டுமே மதிப்பீடு செய்யக்கூடிய ஒன்றாக இருக்கலாம். இருப்பினும், நீங்கள் அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
உங்கள் ராசிக் கட்டத்தின் வேலை சம்பந்தமான பகுதிகலில் சந்திரன் அலைகளை உருவாக்குகிறது. எனவே நிஜ உலகத்தை கையாள்வதில் உங்களுக்கு சில சிரமங்கள் இருக்க வேண்டும். இப்போதைக்கு காதல் கருத்துகள் இரண்டாவது இடத்தைப் பிடிக்க வேண்டியிருக்கும். நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், ஒருவரைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று சொல்வதற்கு எப்போதும் நேரம் இருக்கிறது.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
வணிகம், வேலை மற்றும் இன்பம் ஆகியவை சந்திரனின் விவேகமான இருப்பைக் கொண்டு ஒன்றிணைகின்றன. ஒவ்வொரு எளிய சொல்லுக்கும் பின்னால் ஒரு மறைக்கப்பட்ட மற்றும் சிக்கலான அர்த்தம் உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பெரிதாக சொல்ல இயலாமல் போகலாம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
உதவிகரமான, இணக்கமான கிரக சீரமைப்புகளின் தொடர்ச்சி சில வளமான நிதி முடிவுகளுக்கு உங்களை இட்டுச் செல்லும். குறைந்தபட்சம் நீங்கள் பேரம் பேசுவதற்கு ஒரு கூர்மையான பார்வையை வைத்திருக்க வேண்டும். பணத்திற்கான உங்கள் அணுகுமுறை ஆழ்ந்த உணர்ச்சி சக்திகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
உங்கள் ராசிக்கட்டத்தின் பல பகுதிகளில் சூரியன் உராய்வை உருவாக்குகிறது. அவை உங்கள் ஆழ்ந்த ஆசைகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. எல்லோரும் உங்கள் அலைவரிசையில் இல்லை என்பதை இது போன்ற நேரங்களில் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் நகைச்சுவை உணர்வை கூட்டாளிகள் பாராட்ட மாட்டார்கள்!
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
மற்ற பதினொரு ராசிகளில் பிறந்த நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களை ஒப்புக்கொள்வது கடினமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் சரியாக இருக்கிறீர்கள். இருப்பினும், விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், தற்போதைய சூழ்நிலையில் உங்களைக்கூட ஆச்சரியப்படுத்தும் கூறுகள் உள்ளன. நீங்கள் செய்ய விரும்பும் கடைசி விஷயம். தனிமை உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
நீங்கள் இன்று ஒரு மெண்மையான வழியில் உணர்ச்சிவசப்பட்ட ரோலர்-கோஸ்டரில் இருக்கிறீர்கள். மணிக்கு மணி உங்கள் மனநிலை மாறினால். உங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கவும். சட்ட விஷயங்களில் சாத்தியமான நீண்டகால பார்வையை எடுத்துக் கொள்ளுங்கள். நிபுணர்களின் ஆலோசனையின்றி எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
உங்கள் மறைக்கப்பட்ட, துறவி போன்ற குணங்கள் இன்று வெளிப்படக்கூடும். மேலும், அதிகமாகப் பழக முயற்சிக்கும் நண்பர்களை நீங்கள் வரவேற்பீர்களா என்பது சந்தேகம். உங்கள் ரகசியங்களை தெரிந்துகொள்ள முயற்சிக்கும் எவருக்கும் எதையும் தெரியப்படுத்த வேண்டாம். உங்கள் அந்தரங்கத்திற்கு ஒரு நல்ல காரணம் இருப்பதாகத் தெரிகிறது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
உங்கள் ராசிக்கட்டத்தின் ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் இடையில் நியாயமான அளவு உடன்பாடு உள்ளது. அதர்கு அர்த்தம் நீங்கள் உங்களுடைய மனதை உருவாக்க முடியும்! நீண்டகால திட்டங்களை உறுதிசெய்வதற்கும், அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவதற்கும் இது ஒரு சிறந்த நாள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“