Advertisment

Rasi Palan 29th Decemeber 2020: இன்றைய ராசிபலன்

Daily Rasi palan, Daily Horoscope Tuesday Dec 29 : எல்லா சூழ்நிலைகளிலும்,  வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் மகிழ்ச்சியாக  இருக்க முயற்சி செய்யுங்கள்

author-image
WebDesk
New Update
rasi palan 13th feburary 2021, rasi palan today, இன்றைய ராசிபலன், காலை ராசிபலன் , தினசரி ராசிபலன், ராசி பலன், horoscope, today rasi palan

Rasi Palan 29th December 2020 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 29th December 2020: இன்றைய ராசி பலன், டிசம்பர் 29, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20): உங்களைப் பற்றி நீங்கள் சிந்திப்பது இயற்க்கை.  மற்றவர்களுக்கு நாம் செய்தது என்ன? என்ற கேள்வி  சிறிய ஏமாற்றங்களையும்,  நிராகரிப்புகளையும் கடந்து விட உதவும். முடிந்தவரை , எல்லா சூழ்நிலைகளிலும்,  வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் மகிழ்ச்சியாக  இருக்க முயற்சி செய்யுங்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21):  உணர்வு ரீதியான பிணைப்பை ஏற்படுத்திய உறவுகளை வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்து யோசித்து முடிவு செய்யுங்கள். வாழ்க்கையை  மிக நுட்பமாகவும், சுவாரஸ்யமாகவும்,  ஆக்கப்பூர்வமாகவும் எடுத்து செல்வது குறித்து  சிந்தியுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க நீங்கள் இப்பிறப்பை பெற்றுள்ளீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21):  உறுதியான நிலைப்பாடுடன், நல்ல திசையை நோக்கி செல்வதை என்பதை குடும்ப உறவினர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அப்போது,  தான் அவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.      முதலில் உங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். பின்னர் அறிவையும் , ஞானத்தையும்  பெற தொடங்கலாம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23):  உங்கள் வாழ்க்கைப் பயணம் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும். வாழ்க்கை எளிமை ஆகும். வெளிச்சத்திற்கு வரும் மறைக்கப்பட்ட சில உண்மைகளால் நீங்கள் ஆச்சரியப்படலாம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23): புதியதை அல்லது புதிய திறமையை கற்றுக்கொள்ளும் ஆசை, உங்களுக்கு இல்லை என்றால், பிறகு வாழ்க்கை அழுத்துவிடும். ஆசை மட்டும் இருந்தால் போதாது,  திறனும் இருந்தால் தான் வெற்றியை நிலைநாட்ட முடியும் என்ற புரிதல் உருவாக வேண்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23): சாதகமற்ற சூழலை மாற்றி அமைக்க வேண்டிய பல துருப்புச் சீட்டுகள் இன்னும் உங்கள் கையில் உள்ளன. இருப்பினும், எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. பணம் மிகவும் முக்கியமான விஷயம் என்பதை நினைவில் கொள்வது மிக நல்லது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23):  உங்கள் ஆன்மீக அபிலாஷைகளுக்கு இன்று கொஞ்சம் கூடுதல் இடம் கொடுங்கள். வாய்ப்பு கிடைக்கும் போது,  உங்களைப் பற்றியும், கூட்டாளார்கள் பற்றியும் சிந்திக்க  தொடங்குகள். பதில்கள் ஆச்சரியமாக இருக்கலாம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22):  சக மனிதர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தான் உங்களின் வெற்றி அடங்கியுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.  தொழில் வாழ்க்கையில் நன்மை உண்டாகும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22): அன்றாட வாழ்க்கை நம்பமுடியாத வகையில் மாறும். கடந்த காலத்தில் நீங்கள் நம்பியவர்கள் தற்போது அசாதாரண முகங்களை வெளிபடுத்தத் தொடங்கியுள்ளனர். அதேபோன்று, கடந்த காலத்தில் முகம் சுளித்து சென்றவர்கள், நன்மதிப்பை பெறத் தொடங்குவார்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20): அன்றாட பிரச்சினைகளை எதார்த்தத்தின் அடிப்படையில் அணுகத் தொடங்குகள். சட்டப்பூர்வ பிரச்சினைகளை நீக்கிவிடுங்கள். நெறிமுறை சிக்கல்களை உற்று  கவனியுங்கள். பிடிவாதம் கொண்டவராக, கோபம் கொண்டவராக இருப்பதை நிறுத்துங்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19):  தனிப்பட்ட வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்திக்க நேரிடம்.  உங்கள் வாழ்க்கை ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு (அ) மூன்று மாதங்கள் வரை இதன் தாக்கங்களை உணரக் கூடும். உரிய கவனத்துடன் சிறந்த  மாற்றத்திற்குத் தயாராக வேண்டும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20):  வாழ்க்கையை அதன் சொந்த போக்கில் செல்ல நீங்கள் அனுமதிக்கலாம். திறன்களின் அடிப்படையில், வாழ்க்கைப் பாதையில் முன்னெடுத்துச் செல்லுவீர்கள். குடும்பத்தில் அமைதியான போக்கு நிலவும்.

இராஜதந்திரமாக செயல்படுவதும் மிகவும் நல்லது.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment