Rasi Palan 6th June 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 6th June 2022: இன்றைய ராசி பலன், ஜூன் 6ம் தேதி 2022
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
வேலையில் விரைவில் நெருக்கடியை எதிர்பார்க்கலாம். அனேகமாக, சில நாட்களுக்குள் நட்சத்திரங்கள் சாதகமாக இருக்கும். ஓய்வாக இருக்கும் மேஷ ராசி பெண்கள், அல்லது ஆண்கள் இந்த வாரம் முடிவதற்குள் அவர்களின் பிரகாசமான சாதனைகள் பொது பரிசீலனைக்கு கொண்டுவரப்படுவதைக் காணலாம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
சின்னச் சின்ன பிரச்னைகளை பற்றி மட்டுமே பேசினாலும், இந்த வாரம் நீங்கள் அனைத்து சட்ட சிக்கல்களையும் தவிர்க்க வேண்டும். மறுபுறம், கொள்கைப் பிரச்சினையில் ஒரு நிலைப்பாட்டை எடுங்கள், நீங்கள் இணையில்லாத மரியாதையையும் பாராட்டையும் பெறுவீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
உங்கள் நிதி விவகாரங்கள் பற்றி எச்சரிக்கப்படுகிறீர்கள். உங்கள் சூரிய கட்டத்தின்படி, நீங்கள் ஒரு நீண்ட கால சுழற்சியை கடந்து செல்கிறீர்கள். இதில் நிதி பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவை மிகவும் ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
இந்த வாரம் கடக ராசிக்காரர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஜூன் மாதத்தில் பிறந்த கடகராசிக்காரர்கள் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் விடுதலைக்குள் நுழைகின்றனர்: ஜூலை மாதம் பிறந்த கடக ராசிக்காரர்கள் பாதுகாப்பு, பாரம்பரியம் மற்றும் விஷயங்களைச் செய்வதற்கான தற்போதைய வழிகளில் கவனம் செலுத்த வேண்டும். இது நல்லிணக்கத்தையும் சமநிலையையும் பேணுவதற்கான ஒரு விஷயம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
முதலில், இந்த வாரம் முழுவதையும் பற்றி கூறவேண்டும் என்றால், உங்களில் பலர் உங்கள் வேலை அல்லது மற்ற வழக்கமான வேலைகளில் முக்கியமான கட்டத்தை அடைவீர்கள். இதுபோன்ற சமயங்களில் விவேகத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவதற்கு விவேகமான வழி, ஒவ்வொரு வாய்ப்பையும் உங்களுக்குச் சாதகமாக மாற்றும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
இந்த வாரம் உன்னதமான கன்னி ராசிக்காரர்கள் இக்கட்டான நிலையில் இருப்பதைக் காணலாம். இதன் மூலம் உங்களின் இயல்பான ஆர்வம் மற்றும் உற்சாகத்துடன் சம அளவில் தடைகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் அச்சத்துடன் முரண்படலாம். அடுத்த வாரம் நீங்கள் ஒரு வளமான தொடர்ச்சியை அடைவீர்கள் என்றாலும், உங்கள் செலவுகள் இன்னும் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
இது சமரசத்திற்கான வாரம் அல்ல. ஆனால், அப்படியானால், நிகழ்வுகளால் விட்டுச் செல்லப்பட்ட அணுகுமுறைகள் மற்றும் நிலைகளைப் பற்றிக் கொள்ள இது நேரமல்ல. இருப்பினும், அவை உங்களுக்கு ஒருபோதும் அவ்வளவு நல்லது செய்யவில்லை. நீங்கள் கூட்டாளிகளுடன் உறுதியாக இருக்க வேண்டும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
இந்த வார நட்சத்திரங்கள் சந்தேகமே இல்லாமல், உங்கள் ஆர்வங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் வழியில் ஓரிரு சவால்களை சந்தித்தாலும் கூட, அதிர்ஷ்டவசமாக, சூரியன் உங்களுக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பை வழங்குகிறது. நீங்கள் உறுதியாக இருப்பதாக நினைக்கும் விதத்தில் உங்களை சோதனை செய்ய உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறது. ஏதேனும் தவறு நடந்தால் முதலில் மன்னிப்பு கேளுங்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
உங்கள் நிதி விவகாரங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதால் புலம்பாதீர்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட குறுகிய கால கட்டத்தின் முடிவை நெருங்கிவிட்டீர்கள். அடுத்த மூன்று மாதங்களில் உங்கள் வளத்துக்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரம் ஒரு உணர்ச்சிகரமான சிறிய நெருக்கடி எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் அதை எப்படி கையாளுகிறீர்கள் என்பதைப் பொறுத்து எல்லாம் அமையும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
நீங்கள் விரும்பினால், இந்த வாரத்தின் சவாலான மற்றும் ஆற்றல்மிக்க கிரக நிலைகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம். மேலும், எந்தவொரு மோதலும் உங்களுக்கு சாதகமாக மாற்றப்படலாம். நீண்ட காலமாக, டிசம்பர் பிறந்தநாளைக் கொண்ட உங்களை விட ஜனவரியைப் பிறந்த நாளாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்படவார்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
கும்ப ராசிக்கரர்கள் கடுமையான உழைப்பாளிகள், மொத்த மனிதகுலத்திற்கும் புதிய சாத்தியங்களையும் புதிய ஆற்றலையும் தாங்கி நிற்கிறார்கள். நீங்கள் சிறிய அளவிலாவது மற்றவர்களுக்கு நல்ல வாழ்க்கை முறையைக் காட்டுவதில் மிகவும் திறமையானவர். உதாரணத்துடன் அவர்களுக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுங்கள். அதே நேரத்தில், அவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
உங்கள் சமூக பொறுப்புகள் விரிவடைகின்றன. உங்களில் பலர் இப்போது ஒரு முறையான குழு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாரம், உங்கள் பொறுப்புகளின் உண்மையான தன்மை தெளிவாகிவிடும். மேலும் தொடரலாமா அல்லது கைவிடலாமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் ஒரு சமரசத்தைக் கண்டடைய முயற்சி செய்வீர்கள். ஆனால், அது நீடிக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“