நயன்தாரா முதல் சிஎஸ்கே வரை - இன்றைய டிரெண்டிங் என்ன?

தினந்தோறும் டுவிட்டரில் ஏராளமான விஷயங்கள் பிரபலமாகி வருகின்றன. இதில் ஒரு சில விஷயங்கள் மட்டுமே முதல் ஐந்து இடத்தைப் பிடிக்கின்றன. அது போல இன்று முதல்...

தினந்தோறும் டுவிட்டரில் ஏராளமான விஷயங்கள் பிரபலமாகி வருகின்றன. இதில் ஒரு சில விஷயங்கள் மட்டுமே முதல் ஐந்து இடத்தைப் பிடிக்கின்றன. அது போல இன்று முதல் ஐந்து இடத்தைப் பிடித்த ஹாஷ்டாக் மற்றும் அதன் செய்திகளை வாசிப்போம்.

1. #Nayanthara

Vignesh and Nayanthara

சென்னையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டார். இதில் அவருக்கு இந்த ஆண்டிற்கான மின்னும் நட்சத்திரம் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் மேடையில் நன்றி உரையளித்த நயன், ‘எனது தாய், சகோதரர், வருங்கால கணவருக்கு நன்றி.’ எனப் பேசினார். இதன் மூலம் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயம் ஆனது உறுதியானது. இச்செய்தி வெளியானதால் அனைத்து ரசிகர்களுக்கும் டுவிட்டர் பக்கத்திலேயே குடிகொண்டு இருக்கிறார்கள்.

2. #RajasthanRoyals

Rajasthan Royals New Captain

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பந்தை சேதப்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பதவியைத் தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவன் ஸ்மித் தற்போது விலகியுள்ளார். “ஸ்டீவ் ஸ்மித்தின் ராஜினாமாவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ரஹானே எனும் தலைசிறந்த வீரரை கேப்டனாக்கியுள்ளோம்.” என்று ராஜஸ்தான் அணியின் இணை உரிமையாளர் மனோஜ் பாதலே கூறியுள்ளார்.

3. #MLAsuccessmeet

Kajal Agarwal in MLA Successmeet

சமீபத்தில் வெளியான தெலுங்கு திரைப்படம் ‘எம்.எல்.ஏ’வெற்றிகரமாகத் திரையரங்குகளின் வளம் வருகிறது. இதன் வெற்றி விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. உபேந்திர மாதவ் இயக்கத்தில், காஜல் அகர்வால், நந்தாமுரி கல்யாண் ராம் நடித்துள்ள இந்தத் திரைப்படம் ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ளது. இப்படத்தின் வெற்றி விழா நிகழ்வில் அழகிய வெண்ணிற ஆடையில் ஜொலிக்கிறார் காஜல் அகர்வால். மேலும் இத்திரைப்படம் காஜல் அகர்வாலின் 4வது வெற்றிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

4. #DataChorCongress

Congress and Bjp clash

கடந்த சில நாட்களாகத் தகவல் திருட்டு தொடர்பான சர்ச்சையில் பிரதமர் மோடியின் செயலி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டி வந்தார். பிரதமர் மோடியின் நமோ (NaMo) செயலி, பொதுமக்களின் விவரங்களைத் திருடி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் தெரிவித்து வந்தால். ஆனால் சற்றும் எதிர் பாராமல் அவர் விரித்த வலையில் அவரே சிக்கியுள்ளார். இது தொடர்பாக பாஜகவும் காங்கிரசும் டுவிட்டர் போரில் ஈடுபட்டுள்ளனர். இந்நேரத்தில் எலியட் ஆண்டர்சன் என்ற அடையாளம் தெரியாத ஒருவர்; காங்கிரஸ் தனது செயலி மூலம் பொதுமக்களின் விவரங்களைத் திருடி சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தது என்று கூறினார். மேலும் அதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியிடுவதாகவும் கூறினார். இத்தகவல் டுவிட்டரில் ட்நெருப்பாய் பற்றி எரியும் கருத்து மோதலுக்கு எண்ணை ஊற்றியுள்ளது. இதனால் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது செயலியை முற்றிலுமாக நீக்கியுள்ளது.

5. #fullyfearless

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு வீடியோ ஒன்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சராசரியான பெண்ணின் வாழ்க்கையையும், சென்னை டீமையும் தொடர்புப்படுத்தி இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், வீடியோ முழுவதும் பெயிண்டிங் கொண்டு காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. உருவாக்கம் மிகச் சிறப்பாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த வீடியோ சமர்ப்பிக்கப்படுவதாக வீடியோவை உருவாக்கியவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close