மும்பை தாக்குதல் 11ம் ஆண்டு நினைவு நாள் : அஞ்சலி செலுத்தும் பாதுகாப்பு படையினர்!

10 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டார். அவர் 2012ம் ஆண்டில் யேர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார். 

By: Updated: November 26, 2019, 10:32:02 AM

11 years of Mumbai terror attack : 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் ரயில் நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன் 11ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள், தீவிரவாதத்திற்கு எதிராக அன்று பொதுமக்களை காப்பாற்றி உயிர் துறந்த பாதுகாப்பு படையினருக்கு அஞ்சலி செலுத்தினர்.

11 years of Mumbai terror attack, 26/11 போலிஸ் மித்ர சங்கதானா மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட பாதுகாப்பு படையினர். (Express photos by Arul Horizon) 11 years of Mumbai terror attack, 26/11 இணை ஆணையர் ஹேமந்த் கர்கரே, கூடுதல் ஆணையர் அசோக் கம்தே, எண்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் விஜய் சலஸ்கர், காவல் துறை கண்காணிப்பாளர் ஷஷங்க் ஷிண்டே ஆகியோர் மும்பை தாக்குதலில் தங்களின் இன்னுயிரை நீர்த்தனர். (Express photos by Arul Horizon) இந்த நிகழ்வில், உயிரிழந்த காவல்துறையினரின் புகைப்படங்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர். (Express photos by Arul Horizon) சிறப்பு படைப்பிரிவை சேர்ந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், ஹவால்தார் கஜேந்தர் சிங் பிஷ்த் தீவிரவாதிகளை எதிர்த்து தாக்குதல் நடத்தும் போது உயர் துறந்தனர். (Express photos by Arul Horizon) அஜ்மல் கசாப்பினை உயிருடன் பிடிக்கும் போது துணை காவல் கண்காணிப்பாளர் துக்காராம் மரணமடைந்தார். (Express photos by Arul Horizon)

10 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டார். அவர் 2012ம் ஆண்டில் யேர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

 இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:11 years of mumbai terror attack security officers people pay tributes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X