scorecardresearch

இந்திய அரசு மீதான விமர்சனத்தை அடக்கும் நிறுவனம்; ஆஸி மையத்தில் இருந்து வெளியேறிய 14 கல்வியாளர்கள்

மற்ற விஷயங்களுடன், இந்து தேசியவாதத்தின் எழுச்சி, இந்தியாவில் கல்வித்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் சாதியத்தின் தாக்கம் குறித்த போட்காஸ்டில் உள்ள ஒரு கட்டுரையை நிராகரிப்பதற்கான முடிவை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.

AII, Australia India Institute, Institute stifles criticism of Indian govt, 14 scholars quit Aussie centre, இந்திய அரசின் மீதான விமர்சனத்தை அடக்கும் நிறுவனம், ஆஸ்திரேலியா இந்தியா நிறுவனம், ஏஐஐ, ஆஸ்திரேலியா, மெல்போர்ன் பல்கலைக்கழகம், 14 கல்வியாளர்கள் ராஜினாமா, Australia, australia news, Australia India Institute, Australia India, Australia India relations, Indian Express, India news, current affairs, Indian Express News Service, Express News Service, Express News, Tamil Indian Express India News

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து 14 கல்வியாளர்கள், மெல்போர்னை தளமாகக் கொண்ட ஆஸ்திரேலியா இந்தியா நிறுவனத்துடனான (Australia India Institute) தங்கள் தொடர்பை விட்டு வெளியேறினர். அந்நிறுவனம் இந்தியாவில் ஆளும் அதிகார வகுப்பை விமர்சிக்கும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க தயக்கம் காட்டுவதால், வெளியேறி உள்ளனர்.

மற்ற விஷயங்களுடன், இந்து தேசியவாதத்தின் எழுச்சி, இந்தியாவில் கல்வித்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் சாதியத்தின் தாக்கம் குறித்த போட்காஸ்டில் உள்ள ஒரு கட்டுரையை நிராகரிப்பதற்கான முடிவை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில், இந்தியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வெறுப்புக் குற்றங்கள் எழுந்ததையடுத்து, ஆஸ்திரேலியா இந்தியா நிறுவனம் (ஏ.ஐ.ஐ) 2008-ம் ஆண்டு மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் 8 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்துடன் பல்வேறு கல்வித்துறை ஆராய்ச்சிகள் மூலம் இரு நாடுகளையும் பற்றி மேலும் புரிந்து கொள்ள உருவாக்கப்பட்டது.

இந்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி ஏ.ஐ.ஐ உடன் இணைந்த 13 கல்வியாளர்கள், மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டங்கன் மாஸ்கெல்லிடம் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டனர். ஏ.ஐ.ஐ இந்திய அரசாங்கத்தின் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும், கருத்து வேறுபாட்டின் மீதான ஒடுக்குமுறை மற்றும் இந்திய சிறுபான்மையினரை ஓரங்கட்டுவதை கவனிக்காமல் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. பின்னர், மற்றொரு கல்வியாளரும் ராஜினாமா செய்தார்.

“புலப்படாத சமத்துவமின்மை (வர்க்கம் மற்றும் சாதியைத் தொடுதல்) பற்றிய ஏ.ஐ.ஐ-யின் ஆய்வாளரின் பேச்சுக்கு வந்த சில விமர்சனங்களைத் தொடர்ந்து, காந்தி மீதான தாக்குதல்கள் (மெல்போர்னில் அவரது சிலையின் தலையை துண்டிக்க முயன்றதைக் கருத்தில் கொண்டு) இரண்டு ஏ.ஐ.ஐ ஆய்வாளர்களால் (உரை நிகழ்த்தியவர் உள்பட) தயாரிக்கப்பட்ட ஒரு பகுதியை வெளியிட ஏ.ஐ.ஐ மறுத்துவிட்டது. ஏ.ஐ.ஐ இந்த தலைப்பில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த இரண்டு ஆய்வாளர்களால் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள ஜாதி மற்றும் நிறுவனம் என்ற தலைப்பில், ஆசிய போட்காஸ்ட்டில் கேட்பதற்கான உரையை ஏ.ஐ.ஐ-ன் இணைய தளத்தில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், மற்றவைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்” என்று அந்த கடிதம் கூறுகிறது.

இதில் கட்டுரை மற்றும் போட்காஸ்ட் இரண்டுமே மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் துறை பேராசிரியர் பேராசிரியர் ஹரி பாபுஜி மற்றும் பேராசிரியர் டோலி கிகோன் ஆகியோரின் திட்டங்களாகும். இருவரும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். ராஜினாமா செய்த 14 கல்வியாளர்களில் பாபுஜியும் ஒருவர்.

“காந்தி மீதான நவீனத் தாக்குதல்களைப் புரிந்துகொள்வது” என்ற கட்டுரை, காந்தியின் சிலைகளை சேதப்படுத்துவது உட்பட, காந்தி மீது குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆராய முயல்கிறது.

“காந்தியின் வாழ்க்கையும் எதிர்காலத்திற்கான அவரது பார்வையும் இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைகள் மற்றும் அனைத்து மத குழுக்களுக்கான உரிமைகளுடன் தொடர்புடையது. மத சுதந்திரத்திற்கான உரிமை உண்மையில் இந்திய அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால். இந்து தேசியவாதம் நிதியைப் பெறுவதால் இந்தக் கொள்கைகள் இப்போது ஆதரவை இழந்து வருகின்றன. மேலும் அரசியலமைப்பை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளும் இப்போது பரிசீலிக்கப்படுகின்றன” என்று மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் தளமான பர்சூட் மூலம் வெளியிடப்பட்ட கட்டுரை கூறுகிறது.

அந்த 47 நிமிட பாட்காஸ்ட், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிலவும் சாதி மற்றும் நிறுவனம், சாதி அமைப்பின் தோற்றம் மற்றும் கல்வித்துறை முதல் தனியார் நிறுவனங்கள், அதிகார மட்டங்கள் வரை பல்வேறு துறைகளில் சாதியின் தாக்கத்தை விவரிக்கிறது.

மெல்போர்ன் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளரை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்புகொண்டு கேட்டபோது, “மெல்போர்ன் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியா இந்தியா நிறுவனம் சமீபத்தில் ராஜினாமா செய்த கல்வியாளர்களின் முடிவை மதிக்கின்றன. ஏ.ஐ.ஐ அதன் வாரியம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியின் உத்தி வழிகாட்டுதலுக்கு பல்கலைக்கழகம் உறுதியாக ஆதரவளிக்கிறது. மெல்போர்ன் பல்கலைக்கழகம் கல்வி சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு உறுதிபூண்டுள்ளது. அவை எங்களுடைய முக்கிய மதிப்புகள் மற்றும் அடையாளத்திற்கு மையமாக உள்ளன.” என்று கூறினார்.

ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட மற்றொருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “ஏ.ஐ.ஐ உடன் இணைந்த சுமார் 40 கல்வியாளர்களில் 14 பேர் ராஜினாமா செய்தனர். அதற்கு காரணம், இந்நிறுவனம் மற்ற விஷயங்களில் தவறான செயலில் அதன் மரியாதையை இழந்துவிட்டது. அதன் கடந்தகால வரலாறு மற்றும் பாரம்பரியத்திலிருந்து விலகிவிட்டது” என்று கூறினார். மெல்போர்ன் பல்கலைக்கழகம் தவிர, 14 கல்வியாளர்கள் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம், ஹன்ட்ஸ்வில்லில் உள்ள அலபாமா வணிக பல்கலைக்கழகம், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம், சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , லா ட்ரோப் பல்கலைக்கழகம் மற்றும் அடிலெய்டு பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். லா ட்ரோப் பல்கலைக்கழகத்தின் மொழிகள் மற்றும் கலாச்சாரத் துறையின் விரிவுரையாளர் (இந்தி மொழி) டாக்டர் இயன் வூல்ஃபோர்ட் தனது ட்விட்டரில், “கல்வி சுதந்திரத்தில் அரசாங்கத்தின் குறுக்கீடு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த கவலைகள் காரணமாக, ஆஸ்திரேலியா இந்தியா நிறுவனத்துடனான தனது தொடர்பை ராஜினாமா செய்துள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய அதிகாரி ஒருவரின் கருத்துப்படி, “நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் அமிதாப் மட்டூவின் கீழ் கல்வியாளர்கள் பலர், இரு நாடுகளைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு சமூகத்தை உருவாக்க தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். ராஜினாமா செய்த கல்வியாளர்களில் ஒருவர், இந்த கல்வியாளர்களில் எவருக்கும் ஏ.ஐ.ஐ எந்த வகையிலும் நிதியளிக்கவில்லை” என்று கூறினார்.

தங்கள் ராஜினாமா கடிதத்தில், முன்னாள் ஆஸ்திரேலிய செனட்டர் லிசா சிங் 2021-ல் ஏ.ஐ.ஐ நிறுவனத்தை வழிநடத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்முறை குறித்தும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கருத்துக்கான கோரிக்கைகளுக்கு சிங் பதிலளிக்கவில்லை. டிசம்பர் 2020-ல், சமீபத்தில் வெளியேறிய 12 பேர் உட்பட 24 பேர் மெல்போர்ன் பல்கலைக்கழகத்திற்கு எழுதிய கடிதத்தில் மற்ற பிரச்சினைகளை எழுப்பினர். அந்தக் கடிதத்தில், “இந்திய தூதரக தலையீட்டைத் தொடர்ந்து, பொதுவில் விளம்பரப்படுத்தப்பட்ட நிகழ்வு, தனிப்பட்ட அழைப்பிதழ் மட்டுமே கருத்தரங்கு என்று தரமிறக்கப்பட்டது” என்று அவர்கள் கூறினர். இது குறித்து கருத்து கேட்டதற்கு கான்பெராவில் உள்ள இந்திய தூதரகம் பதிலளிக்கவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: 14 scholars quit aussie centre because institute stifles criticism of indian govt