Advertisment

15 நாடுகளின் தூதர்கள் ஸ்ரீநகர் வருகை, இந்திய தலைவர்களையும் அனுமதிக்க காங்கிரஸ் கோரிக்கை

எவ்வாறாயினும், இந்த குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த தூதர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள், பின்னர்  தனியாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kashmir foreign delegation visit, foreign envoys kashmir visit,

kashmir foreign delegation visit, foreign envoys kashmir visit,

ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணமாக  15 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு தூதர் குழு இன்று ஸ்ரீநகருக்கு வந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு  அந்தஸ்த்தை ரத்து செய்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்பு  முதல் முறையாக வெளிநாட்டு தூதர்கள் வருகைதருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisment

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ ஜஸ்டர் உடன் 15 நாடுகளின் தூதர்களும் சிறப்பு விமானத்தின் மூலம் இன்று ஸ்ரீநகரின் விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்களை ஜம்மு-காஷ்மீர் உயர் அதிகாரிகள் வரவேற்றனர் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்து.

நாளை சந்திர கிரகணம்: மனதில் நிறுத்த வேண்டிய முக்கிய அம்சங்கள்

புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசத்தின் குளிர்கால தலைநகரமாக கருதப்படும் ஜம்முவிற்கு  தூதர்கள் இன்று  இரவு தங்க வைக்கப்படுகிறார்கள்.  லெப்டினன்ட் கவர்னர் ஜி சி முர்மு மற்றும் தன்னார்வ சமூக அமைப்புகளையும் அவர்கள் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்திய அரசியல்வாதிகளை மட்டும் செய்து, வெளிநாட்டு தூதர்களை காஷ்மீருக்கு செல்ல அனுமதிப்பதில் அரசாங்கம் 'இரட்டைத் நிலையை' பின்பற்றுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

வெளிநாட்டு தூதர்களுக்கு சுற்றுலா  பயணங்கள் ஏற்பாடு செய்யாமல், நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களையும் காஷ்மீருக்கு தடையின்றி செல்ல அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை என்று கூறியுள்ளது .

 

இந்த தூதுக்குழுவில், அமெரிக்கா தவிர, பங்களாதேஷ், வியட்நாம், நோர்வே, மாலத்தீவு, தென் கொரியா, மொராக்கோ மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் தூதர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

எவ்வாறாயினும், இந்த குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த தூதர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள், பின்னர்  தனியாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன.

தற்போதைய  தூதர்குழு ஜம்மு- காஷ்மீர் மக்களுடன் சுதந்திரமாக தொடர்பு கொள்ளலாம் ( ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்புக்கு உட்பட்டு ) .  எவ்வாறாயினும், தடுப்பு மையங்களில் இருக்கும் தலைவர்களை சந்திக்க வேண்டும்  என்று எந்த தூதரும் இதுவரை குறிப்பாக இந்திய அரசாங்கத்திடம்  கேட்கவில்லை,”என்று அரசு வட்டாரங்கள்  தெரிவிக்கின்றது.

பகத்சிங் கூட்டாளி அஷ்ஃபகுல்லா கானின் பெயரில் உ.பி.யில் பூங்கா! யாரிந்த கான்?

ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் தடுத்து மையங்களில் வைக்கப்பட்டுள்ளவர்களையும் (மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட) சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

Bjp Jammu And Kashmir Rahul Gandhi All India Congress Jammu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment