Advertisment

கான்கிரீட் ட்ரெக்கில் மறைந்து பயணம் செய்த 18 பேர்... கைது செய்தது இந்தூர் காவல்துறை

அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
18 people found travelling in concrete mixer truck from Maharashtra to lucknow

18 people found travelling in concrete mixer truck from Maharashtra to lucknow

18 people found travelling in concrete mixer truck from Maharashtra to lucknow :  கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 40 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. பலரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு, வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்காக நேற்றில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

Advertisment

பலர் கையில் காசில்லாமல், உணவில்லாமல், தங்க இடமில்லாமல் சைக்கிளிலும், வெறுங்கால்களிலும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து தங்களின் சொந்த ஊரான லக்னோவுக்கு செல்ல, கான்கிரீட் மிக்ஸ் செய்யும் ட்ரெக்கில் பதுங்கி பயணம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் இந்தூரில் போக்குவரத்து காவல்துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது லக்னோ காவல்துறை.

டி.எஸ்.பி. உமாகாந்த் சௌத்ரி இது குறித்து கூறுகையில் அவர்களை ஏற்றி வந்த ட்ரெக் மற்றும் 18 நபர்களும் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment