Advertisment

2-DG நம்பகத்தன்மை கொண்டது தான்; ஆனால் பயன்பாட்டிற்கு முன்பு நிறைய தரவுகள் தேவை

இப்போது நான் நிச்சயமாக இதனை சிகிச்சையின் ஒரு பகுதியாக மக்களுக்கு பரிந்துரை செய்யமாட்டேன்.

author-image
WebDesk
New Update
2-DG holds promise but need more data before use

 Prabha Raghavan , Anil Sasi 

Advertisment

2-DG holds promise but need more data before use : இந்தியாவில் கோவிட் நோய்க்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கும் சிறந்த மருத்துவர்கள், திங்கள் கிழமை அன்று மத்திய அரசு அவசர பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்த 2-டிஜி (2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ்) மருந்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஆனாலும் கொரோனாவில் இருந்து மீள எடுத்துக் கொள்ளும் காலத்தை குறைக்கும் என்றும், ஆக்ஸிஜன் தேவையை குறைக்கும் என்பதற்கான கூற்றினை ஆதரிக்க சான்றுகள் தேவை என்று கூறியுள்ளனர்.

அவர்களின் ஒருமித்த கருத்து என்னவென்றால், பாரம்பரியமாக புற்றுநோய் மருந்தாகப் பயன்படுத்தப்படும் 2-டி.ஜியின் பின்னால் உள்ள கொள்கை நன்கு நிறுவப்பட்டுள்ளது. இது செல்கள் குளுக்கோஸை உடைக்கும் கிளைகோலிசிஸ் செயல்முறையை தடுக்கிறது. இந்த செயல்முறை தான் வைரஸ்கள் நகலெடுக்கவும் பரவவும் ஆற்றலைப் பெற உதவுகிறது. எனவே இந்த செயல்முறையை சீர்குலைப்பது கோவிட் -19 சிகிச்சையில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கலாம். ஆனாலும் கூட இதனை பரவலாக பயன்படுத்த மேலும் பல தரவுகளும், ஆராய்ச்சி முடிவுகளும் தேவை என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

மேலும் படிக்க : அரசின் நேரடி கண்காணிப்புக்கு கீழ் வரும் மயானங்கள்; அதிக கட்டணம் பெற்ற ஊழியர்கள் மீது நடவடிக்கை

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஜெர்மன், பிரேசில் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்ட 5 ஆராய்ச்சி இதழ்களில் இந்த மருந்து பாதுகாப்பானது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவமனை அமைப்பில் இருந்து பெறப்பட்ட முடிவுகள் அடிப்படையில் ஏதும் வெளியாகவில்லை.

இந்தியாவில் வெளியிடப்பட்ட இந்த மருந்து, டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் (டி.ஆர்.எல்), இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வெளியிடப்பட்டதாகும். மார்ச் 2020 இல் ஹரித்வாரை தளமாகக் கொண்ட பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்தின் உறுப்பினர்கள் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நான் - பியர் (Non-Peer) மதிப்பாய்வு கட்டுரை, பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் தலைவர் ஆச்சர்யா பாலகிருஷ்ணனால் எழுதப்பட்டு ரிசர்ச்கேட்டில் வெளியிடப்பட்டது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் ஜனவரி-பிப்ரவரி 2021 பதிப்பில் இது மேற்கோள் காட்டப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

தலைமை ஆசிரியர் மட்டும் இல்லாமல், பதஞ்சலியுடன் தொடர்பில் உள்ள மூன்று நபர்கள் (பல்லவி தாக்கூர், நர்சிங் சந்திர தேவ் மற்றும் அனுராக் வர்ஷ்னேய்), விவேகானந்தா கல்வி சங்கத்தின், தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்த சிவம் சிங், ஜெய்ன் விஷ்வ பாரதி நிறுவனத்தின் வினெய் ஜெய்ன், சென்னை தளமாக கொண்ட சிமாட்ஸ் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் ராகேஷ் குமார் ஷர்மா ஆகியோர் இந்த ஆராய்ச்சி கட்டுரையை எழுதியுள்ளனர். தாக்கூர் மற்றும் ஷர்மா டி.ஆர்.டி.ஓவுடன் தொடர்பில் உள்ளனர். அனுமதியை வரவேற்ற ஷர்மா, 2-டிஜிக்கான ஆராய்ச்சி சிமட்ஸ் மற்றும் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணாவின் தலைமையில் நடத்தப்பட்டது பெருமைக்குரிய விஷயம் என்று ட்வீட் செய்துள்ளார்.

2டிஜி இன்னும் சந்தையில் அறிமுகம் செய்யவில்லை. மேலும் அதன் விலை குறித்தும் அறிவிக்கப்படவில்லை. பல வல்லுநர்கள் இந்த ஒப்புதலுக்கு எதிராக எச்சரிக்கை செய்துள்ளனர்.

இடைநிறுத்தப்பட்ட சோதனைகளுடன் விரைவான ஒப்புதலைப் பெற டி.ஆர்.எல் 2020 ஆம் ஆண்டு பல முயற்சிகளை மேற்கொண்டதை பதிவுகள் காட்டுகின்றன. இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரின் நிபுணர் குழுவான சப்ஜெக்ட் எக்ஸ்பெர்ட்ஸ் கமிட்டி இந்த நடவடிக்கைகள் மீறப்பட்டது என்று கூறியுள்ளது.

இந்த ஆணையம், மனிதர்கள் மீது போதுமான சோதனைகளை மேற்கொள்ளாமல் இந்த மருந்திற்கு அனுமதி வழங்க முடியாது என்று அறிவித்திருந்தது. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையைத் தொடர்ந்து, இந்த ஆணையம் மே 1 அன்று அவசரகால பயன்பாட்டிற்கு இந்த மருந்திற்கான அனுமதியை வழங்கினார்.

மகாராஷ்டிரா கோவிட் பணிக்குழுவின் நிபுணர் உறுப்பினர் டாக்டர் சஷாங்க் ஜோஷி, மருந்து பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக உள்ளதே தவிர பொதுவெளியில் அதனை பயன்படுத்துவதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் போதுமான தரவுகள் இல்லை என்று கூறினார். பொதுவெளியில் ஆராய்ச்சியின் தரவுகள் இருந்தால் மட்டுமே இதனை நான் பயன்படுத்துவேன். நீரிழிவு நோய் கொண்டவர்கள் மற்றும் இதய நோய் கொண்டவர்கள் மத்தியில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. ஆராய்ச்சிக்கு பிறகு மிதமான நோய் கொண்டவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (எல்.என்.ஜே.பி) மருத்துவமனை இயக்குநர் சுரேஷ்குமார் இது நம்பகத்தன்மை உடையதாகவே இருக்கிறது. ஆனால் நாங்கள் இதனை பரிந்துரை செய்த பிறகு எவ்வளவு சிறப்பாக பயனளிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்போதுவரை, தேர்வு செய்யப்பட்ட சில இடங்களில் மட்டும் தான் இந்த மருந்து கிடைக்கிறது. இதை நாம் நடைமுறையில் பார்த்தவுடன், அது செயல்படக்கூடும், ஏனென்றால் ஆக்ஸிஜன் என்பது பெரும்பாலான நோயாளிகளுக்கு தேவைப்படும் ஒன்றாகும், ”என்று அவர் கூறினார்.

இப்போது நான் நிச்சயமாக இதனை சிகிச்சையின் ஒரு பகுதியாக மக்களுக்கு பரிந்துரை செய்யமாட்டேன். எழுத்துவடிவ மதிப்புகளுக்கும் மருத்துவ விளைவுகளுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதுவரை போதுமான மருத்துவ விளைவுகளை இந்த மருந்து காட்டவில்லை. மூன்றாம் கட்ட சோதனையில் சிறந்த பயனை அளிக்கும் என்றால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று ஹோலி ஃபேமிலி மருத்துவமனையின் தலைவர் சுமித் ராய் கூறியுள்ளார்.

போதுமான தரவுகள் இல்லாத நிலையில், இந்த 2DG மருந்து ஆக்ஸிஜன் தேவையை குறைக்கும் என்று கூற்றினை ஆதரிக்க முடியாது என்று வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும் இதற்கான அனுமதிக்கு வெளிப்படைத் தன்மை இல்லை என்பதை மேற்கோள் காட்டியுள்ளார் ஹான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பேராசிரியர் மாதவ் தம்பிசெட்டி. முடிவெடுப்பதில் விரைவான செயல்திறனைக் கொடுக்கும் விஞ்ஞான ரீதியான கடுமையைப் பற்றி தீவிரமான கவலைகள் உள்ளன, இது நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வளர்ந்து வரும் விரக்தியை மேலும் அதிகரிக்கும் என்றார்.

பாதுகாப்பு அமைச்சகம் மே 8ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் படி இரண்டாம் கட்ட சோதனை 110 நோயாளிகளிடம் நடத்தப்பட்டது. ஆனாலும் 2020ம் ஆண்டு இரண்டாம் கட்ட சோதனையை 40 நபர்களிடம் நடத்திய டி.ஆர்.எல். -இன் சோதனை பதிவேட்டில் பதிவேற்றப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட விவரங்களில் பிரதிபலிக்காது.

மூன்றாம் கட்ட சோதனை 220 நோயாளிகளிடம் டிசம்பர் 2020 மற்றும் மார்ச் 2021 காலகட்டத்திற்கு இடையே நடத்தப்பட்டது. மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையின் விரிவான தகவல்கள் டி.சி.ஜி.ஐ.க்கு வழங்கப்பட்டன என்று அது கூறியது, சோதனைகளின் முடிவுகள் ஆக்ஸிஜன் சிகிச்சை / சார்புநிலையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது என்று கூறியது.

மே 1 அன்று 2-டிஜிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட போதிலும் எஸ்.இ.சியின் முடிவுகளை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிடவில்லை. இது தொடர்பாக மருந்துக் கட்டுப்பாளர் ஜெனரல் வி.ஜி. சோமனிக்கு அழைப்புகள் விடுத்தும் பதில்கள் ஏதும் கிடைக்கவில்லை.

புற்றுநோய்க்கான சிகிச்சையில் போதுமான நன்மைகளை அளிக்கின்ற காரணத்தால் 2டிஜி வெகு ஆண்டுகளாக உலகம் முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. புற்றுநோய்களுக்கு அறுவைசிகிச்சை அற்ற சிகிச்சை முறைகளில் 2-டிஜியின் விளைவை உணர்ந்து அதன் தாக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. DRDOவின் Nuclear Medicine and Allied Sciences ஆராய்ச்சி நிறுவனம் இந்த மூலக்கூறுக்கான தொழில்நுட்பத்தை டி.ஆர்.எல்-க்கு 2014 இல் மாற்றியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment