Advertisment

இந்தியா- அமெரிக்கா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், கடந்த நான்கு ஆண்டுகளில் கையெழுத்தான மிகவும் முக்கியமான ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
India US 2+2 dialogue, India US ministerial meeting, 2+2 dialogue, India US relations, Mike Pompeo, Mike Pompeo Delhi visit, Mike Pompeo India visit, India news, Indian Express

 Shubhajit Roy

Advertisment

2 plus 2 today decks cleared for key India US defence agreement : Indo-US Basic Exchange and Cooperation Agreement (BECA) ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான அனைத்து செயல்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுளது. இந்த ஒப்பந்தம் புவி - இடம் சார்ந்த உளவுத்துறை, செயற்கைகோள் புகைப்படங்கள் மற்றும் வரைபடங்களை பாதுகாப்பு பயன்பாட்டிற்காக வழங்கப்படுதல் தொடர்பானது. அமெரிக்க பாதுகாப்புதுறை செயலாளர் மார்க் டி எஸ்பெர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் ஆர் பாம்பியோ திங்கள் அன்று டெல்லி வந்தனர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு செயலாளர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளாரை சந்திக்கின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரே ஒரு வாரம் இருக்கின்ற நிலையில் இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையிலும், தொடர்ச்சியாகவும் இருக்கும் என்பதை சமிக்ஞை மூலமாக அறிவிக்கிறது.

"இன்றைய விவாதங்கள் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கு புதிய பலத்தை சேர்க்கும்" என்று எஸ்பருடன் சந்தித்த பின்னர் சிங் ட்வீட் செய்தார். இந்த ஆலோசனைக் கூட்டம் சவுத் பிளாக்கில் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. முத்தரப்பு சேவையை கௌரவிக்கும் நிகழ்விற்கு எஸ்பரை சிங் அழைத்தார். இந்த பேச்சுவார்த்தைகள் "பரந்த அளவிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் தீவிரமாக்குவதை நோக்கமாகக் கொண்டவை" என்று சிங் கூறினார். இரண்டு அமைச்சர்களும் இம்முறை பி.இ.சி.ஏ ஒப்பந்தம் இந்த சந்திப்பில் கையெழுத்தாகும் என்று நம்பிக்கை தெரிவித்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், கடந்த நான்கு ஆண்டுகளில் கையெழுத்தான மிகவும் முக்கியமான ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

To read this article in English

பாதுகாப்புத்துறை அமைச்சர் முப்படை தளபதியான பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம். நரவானே, விமானப்படை தளதி மார்ஷல் ஆர்.கே.எஸ். பதௌரியா மற்றும் கப்பற்படை தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார் ஆகியோருடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

பாதுகாப்புத்துறை அறிக்கையின் படி, இரண்டு அமைச்சர்களும் இரு நாட்டு பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை பல நிலைகளிலும் ஆலோசத்தினர். “இரண்டு தலைவர்களும், புதிய இடங்களில் சேவை, சேவை மட்டங்கள் மற்றும் கூட்டு மட்டங்களில் தேவைப்படும் ஒத்துழைப்பு குறித்து உரையாடி உள்ளனர். இந்த பேச்சு வார்த்தை கொரோனா காலத்திலும் தடைகளின்றி அனைத்து மட்டங்களிலும் குறிப்பாக Military Cooperation Group (MCG)-ல் நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க : சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்

மலபார் 2020 கூட்டு ராணுவ பயிற்சியில் ஆஸ்திரேலியா இணைவதை வரவேற்று பேசினார் எஸ்பெர். இந்த ஆண்டு நடைபெறும் ராணுவ பயிற்சியில் ஆஸ்திரேலியாவும் பங்கேற்கிறது என்று இந்திய சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ராஜ்நாத் சிங், அத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை மேற்கோள் காட்டினார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள், தற்போது தாராளமயமாக்கப்பட்டிருக்கும் கொள்கைகளை கவனிக்க வரவேற்றார். எஸ்பருடன் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் மற்றும் பென்டகன் மூத்த அதிகாரிகள் இருந்தனர்.

ஜெய்சங்கர் மற்றும் பாம்பியோவின் சந்திப்பு ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது. சீனா குறித்து வெளிப்படையாக பேசிய அவர்கள், உலகளாவிய நிலைமை மற்றும் அதன் சமகால பிரச்சனைகள் குறித்தும் ஆலோசித்தனர் என்று தெரிய வருகிறது. மேலும் ஆசியாவின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விசயங்கள் குறித்தும் பேசினர் என்று தெரிய வந்துள்ளது. மேலும் பல முக்கிய விசயங்களை நான்கு அமைச்சர்கள் ஒன்றாக சந்திக்கும் இன்றைய நிகழ்வில் பேசுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. கொரோனா காலத்தில் அனைத்து பகுதிகளிலும் வீடியோ மூலமாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகிற போது இந்த நேர் சந்திப்பு முக்கிய கவனம் பெறுகிறது.

மேலும் படிக்க : ஆஸ்திரேலியா – சீனா உறவில் விரிசல் விழ காரணம் என்ன?

ஐந்து மாதங்களுக்கும் மேலாக கிழக்கு லடாக் பகுதியில் சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது எனவே இந்த கூட்டம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை அமெரிக்காவின் பாம்பியோ தலைமையிலான குழு கடுமையாக விமர்சனம் செய்தது.

BECA இன் கையொப்பம் அமெரிக்காவின் புவியியல் நுண்ணறிவைப் பயன்படுத்தவும், தானியங்கு அமைப்புகள் மற்றும் ஏவுகணைகள் மற்றும் ஆயுத ட்ரோன்கள் போன்ற ஆயுதங்களின் துல்லியத்தை மேம்படுத்தவும் இந்தியாவை அனுமதிக்கும். இது நிலப்பரப்பு மற்றும் ஏரோநாட்டிகல் தரவு மற்றும் மேம்பட்ட தயாரிப்புகளுக்கான அணுகலை வழங்கும். ஜூன் 15ம் தேதி நடைபெற்ற கால்வான் தாக்குதலுக்கு பிறகு பாம்பியோ ஜெயசங்கரை அழைத்து பேசினார். அதுவே இன்றைய முன்னேற்றங்களுக்கு வழி வகுத்தது. மேலும், ஜூலை இரண்டாவது வாரத்தில் எஸ்பர் ராஜ்நாத் சிங்கிடம் பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்தியா சீனா இடையே இருக்கும் எல்.ஏ.சியில் உள்ள 3,488 கி.மீ தொலைவில் உயர்தர செயற்கைகோள் புகைப்படங்கள், டெலிபோன் இடைமறிப்புகள், சீனாவின் ராணுவ துருப்புகள் குறித்த தரவுகள் மற்றும் ஆயுத பணியமர்த்தல் ஆகியவை குறித்து அறிந்து கொள்ள இந்த ஒத்துழைப்பு வழி வகுக்கிறது.

வெளியுறவுத்துறை அமைச்சர் அனுராக் ஸ்ரீவஸ்தவா திங்கள் கிழமை அன்று 2+2 ஆலோசனைக் கூட்டமானது, இந்தியா அமெரிக்கா உறவுகளை முன்னோக்கி செலுத்த மிக முக்கியமானதாக உள்ளது என்று கூறினார். செப்டம்பர் 2018ம் ஆண்டு இந்த ஆலோசனை கூட்டத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. வாசிங்டனில் டிசம்பர் 2019ம் ஆண்டு கடைசியாக இது தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. 2+2 ஆலோசனைக்கு பிறகு அமெரிக்க செயலாளர்கள் இருவரும் இணைந்து பிரதமர் மோடியுடன் வீடியோ காலில் பேச உள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.எஸ்.ஏ அஜித் தோவலுடனும் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர் இவர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India-US Comprehensive Global Strategic Partnership-ல் முன்னேற்றம் பெற இருநாட்டு அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். 2+2 ஆலோசனை கூட்டம் இராண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையேயான ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றும். இந்தோ-பசிபிக் கடற்படை சுதந்திரத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் இரண்டு கடற்படைகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறது.

India China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment