காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு தீவிரவாதிகள் பிடிபட்ட நிலையில், அவர்களுடன் போலீஸ் துணை கண்காணிப்பாளர் பதவியில் உள்ள தேவிந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
காஷ்மீர் மாநில போலீஸ் துணை கண்காணிப்பாளர் பதவியில் உள்ள தேவிந்தர் சிங் என்பவர், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். கடந்த சனிக்கிழமை, ஸ்ரீநகர் விமானநிலைய பகுதியில் தேடப்படும் தீவிரவாதிகள் காரில் செல்வதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 2 தீவிரவாதிகளுடன். தேவிந்தர் சிங் உடன் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளுக்கு 2001ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதல் உள்ளிட்ட பெரிய தாக்குதல்களில் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தாக்குதலின் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, தனது வக்கீலுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, டிஎஸ்பி தேவிந்தர் சிங், அப்போது ஹம்ஹாமா பகுதியின் ஜமம்மு காஷ்மீர் சிறப்பு செயல்பாட்டு குழுவில் இருந்தார். அவர் எங்களுக்கு உதவினார். டில்லியில் தங்குவதற்கு வாடகைக்கு இடம் பிடித்து தந்ததோடு மட்டுமல்லாது, கார் ஒன்றையும் வாங்கித்தந்தார். இந்த விவகாரத்தில், தேவிந்தர் சிங் மட்டுமல்லாது ஷாண்டி சிங் என்ற போலீஸ் அதிகாரியும் எங்களுக்கு உதவி செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அப்சல் குருவுக்கு, 2013ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தீவிரவாதிகளுடன் போலீஸ் டிஎஸ்பி தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் கூறியதாவது, நாடாளுமன்ற தாக்குதலில், தேவிந்தர் சிங் உடனான தொடர்பு குறித்து விசாரணை துவக்கப்படவில்லை. இதுதொடர்பான ஆவணங்கள் இல்லாதநிலையிலும், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
தீவிரவாதிகள், காஷ்மீரை விட்டு வெளியேற தேவிந்தர் சிங் உதவியது தொடர்பாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, வேறு எந்த எந்த விவகாரங்களில் எல்லாம் தீவிரவாதிகள் அவரை பயன்படுத்தக்கொண்டனர் உள்ளிட்ட எங்களது விசாரணை வளையத்திலிருந்து யாரும் தப்பமுடியாது என்று அவர் மேலும் கூறினார். அவர் பேசினால் மட்டுமே, அதிக தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
தேவிந்தர் சிங் உடன் தொடர்புடைய கருதப்படும் ஷாண்டி சிங், 2003ம் ஆண்டு முதல் சிறையில் உள்ளார். அப்சல் குரு விவகாரத்தில் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. பாகர்பூர் பகுதியை சேர்ந்த முகம்மது அயூப் தார் விசாரணை கைதியாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் மர்ம மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக ஷாண்டி சிங், சிறையில் உள்ளார்.
1999ம் ஆண்டு ஜூன் மாதம், முகம்மது அயூப் தாரை, ஷாண்டி சிங் கைது செய்தார். அவர் நடத்திய விசாரணையின் போது அவர் மரணமடைந்தார். இதனை மறைக்க ஷாண்டி சிங், முகம்மது தாரின் உடலில் துப்பாக்கியால் சுட்டு, அவர் வசம் சில ஆயுதங்களை வைத்து தல்வான் கிராமப்பகுதியில் நடந்த என்கவுண்டரில் முகம்மது தார் கொல்லப்பட்டதாக நாடகம் ஆடியுள்ளார். மனித உரிமை ஆணையத்தின் வசம் இந்த விவகாரம் சென்றநிலையில், கிரைம் பிராஞ்ச் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, அதன்முடிவில், ஷாண்டி சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர் சிறைவாசம் அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:2001 parliament attack afzal guru shadow davinder singh arrested
ராமஜென்ம பூமி நன்கொடை: ரூ. 11,000 வழங்கிய திமுக எம்.எல்.ஏ மஸ்தான்
650 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்; ஆரம்பமானது சென்னை புத்தகத் திருவிழா!
Tamil News Live : 50 தொகுதிகள் கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைமை கடிதம்!
நெடுமாறன் ராஜாங்கம் ஊருக்கு எப்படி கரெண்ட் வந்தது? வெளியானது நீக்கப்பட்ட காட்சிகள்!
பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் : இன்று புதுச்சேரி வருகிறார் மோடி!