Advertisment

அமைப்பு சாரா  துறையின் முதுகெலும்பு உடைக்கப்பட்டது- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஆனால், அந்த 21 நாளில் அமைப்பு சாரா  துறையின் முதுகெலும்பு உடைக்கப்பட்டது

author-image
WebDesk
Sep 09, 2020 20:16 IST
Rahul Gandhi INdian Economy video

Rahul Gandhi

கொரோனா வைரசைக் கட்டுபட்டுத்த முன்னேற்பாடில்லாமல் அறிவிக்கப்பட்ட  21 நாள் பொது முடக்கநிலை பேரழிவு திட்டம் என்றும், அமைப்புசாரா துறைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை என்றும்  ராகுல் காந்தி தெரிவித்தார்.

Advertisment

தனது ‘லாக் டவுன் கி பாத்’ தொடரின் நான்காவது மற்றும் இறுதி வீடியோவில், "  கொரோனா என்ற பெயரில் அமைப்பு சாரா  துரையின் மீது மூன்றாவது மிகப்பெரிய தாக்குதல் நடந்தது. சிறு, குறு தொழில் செய்யும்  ஏழைகள் அதில் வரும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அறிவிக்கப்பட்ட பொது முடக்கநிலை  அவர்களை பெரிதும் தாக்கியது"என்று  கூறினார்.

பிரதமர்,  கொரோனாவுக்கு எதிரான 21 நாள் போர் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த 21 நாளில் அமைப்பு சாரா  துறையின் முதுகெலும்பு உடைக்கப்பட்டது என்று ராகுல் காந்தி தனது வீடியோவில் தெரிவித்தார்.

 

ஏழைகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை வரவு வைக்கவும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு சிறப்பு  பொருளாதார  தொகுப்பை அறிவித்திட காங்கிரஸ் கட்சி பலமுறை  அரசை மன்றாடி கேட்டுக் கொண்டது. அரசாங்கம் எதற்கும் செவி சாய்க்கவில்லை அதற்கு பதிலாக,  ஒரு சில தொழிலதிபர்களின் லட்சக்கணக்கான கோடி கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்தது என்றும் தெரிவித்தார்.

பொது முடக்கநிலை கொரோனா பெருந்தொற்றுக்கான தாக்குதல் அல்ல.  நாட்டின் ஏழை மக்கள்,  இளைஞர்களின் எதிர்காலம், அமைப்புசாரா பொருளாதாரம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அவர் மேலும் கூறினார்.

பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி, கொரோனா பொது முடக்கநிலை போன்ற மோடி அரசின் நடவடிக்கை நாட்டின் 90% க்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய முறைசாரா அமைப்பினை சீரழிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக ராகுல் காந்தி தனது முந்திய வீடியோக்களில் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment