Advertisment

புலம் பெயர் தொழிலாளர்களுடன் சென்ற லாரிகள் நேருக்கு நேர் மோதல்! 24 பேர் பலி...

37 நபர்கள் காயத்துடன் சைஃபாய் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
24 migrants killed, 37 injured in truck accident in Auraiya, Uttar Pradesh

24 migrants killed, 37 injured in truck accident in Auraiya, Uttar Pradesh

24 migrants killed, 37 injured in truck accident in Auraiya, Uttar Pradesh : கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகமானதை தொடர்ந்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. 50 நாட்களுக்கும் மேலாக நீடித்திருக்கும் இந்த லாக்டவுனில், வேலை இழந்து தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல வழியின்றி தவித்து வந்தனர். போதுமான உணவு, நீர் ஆகியவற்றுடன் ஒரு மாநிலத்தில் இருந்து ஆயிரம் கி.மீ தொலைவிற்கு அப்பால் இருக்கும் தங்களின் வீடுகளை நோக்கி நடந்தே சென்றனர். மூன்றாம் கட்ட லாக்டவுனில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர் திரும்புவதற்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisment

ஆனாலும் கையில் காசில்லாத சூழலிலும், இந்த விசயம் தெரிந்து கொள்ளாத வகையிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் இருக்கின்ற காரணத்தால் ரயில்வே தண்டவாளங்கள் வழியாக நடத்தல், மற்றும் கிடைக்கும் லாரிகள், ட்ரக்குகளில் ஏறி தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கின்றனர்.

மேலும் படிக்க : காண்டாமிருகத்தை விரட்ட கம்பு சுத்தும் யானை : யெப்பா இது நல்ல கதையா இருக்கே!

இன்று காலை உத்தரபிரதேசத்தின் ஔரையா (Auraiya) மாவட்டத்தில், காலை 2:30 மணிக்கு இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு ஆளாகியுள்ளது. இது குறித்து ஔரையா பகுதி கூடுதல் எஸ்.பி. கம்லேஷ் குமார் தீக்சித் கூறுகையில் “காவல்துறையினர், விபத்து குறித்து அறிந்துவுடன் நேராக விபத்து நடந்த இடத்திற்கு சென்று, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து காலை 2 மணியில் இருந்து மூன்று மணிக்குள் நடந்திருக்கலாம். ராஜஸ்தானில் இருந்து வொய்ட் புட்டி ஏற்றி வந்த ட்ரோலி ட்ரக்கில், புலம் பெயர் தொழிலாளர்கள் பலரும் பயணித்து வந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“ 

மேலும் படிக்க : எங்க இருந்தாலும் ட்ரெய்னிங் தான் முக்கியம் – பரபரக்க ஓடும் விராட் கோலி!

அவர்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊரான ஜார்கண்ட், பிகார், மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு செல்ல அந்த ட்ரெக்கில் வந்தனர். இன்று காலையில் மிஹௌலியில் இருக்கும் தாபா ஒன்றில் டீ குடிக்க இறங்கியுள்ளனர். அதே நேரத்தில் டெல்லியில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுடன் வந்த டி,சி,எம். ட்ரக், ராஜஸ்தானில் இருந்து வந்த ட்ரெக்குடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் 24 நபர்கள் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிட்டார். 37 நபர்கள் காயத்துடன் சைஃபாய் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“ 

Uttar Pradesh Migrant Workers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment