26/11 Mumbai Attack Anniversary Updates : ‘தீவிரவாதத்தை நிறுத்தவில்லை எனில் பாகிஸ்தான் பக்க விளைவுகளை சந்திக்கும்’ – ராஜ்நாத் சிங்

26/11 Mumbai Attack 11th Anniversary Updates: இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் பெருமிதம் கொள்கிறது. 26/11 மும்பையின் கறுப்பு நாள். இந்த தாக்குதலில் மக்களை காப்பாற்ற எத்தனையோ காவலர்கள் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்

By: Nov 26, 2019, 8:40:30 PM

26/11 Mumbai Attack 11th Anniversary Updates: 26/11 எனும் மும்பை தீவிரவாத தாக்குதலின் கொடூர சம்பவத்தின் 11வது நினைவு ஆண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸின் ’26/11 Stories of Strength’ என்ற நிகழ்வால் அனுசரிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இருவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கும் 26/11 ஸ்டோரீஸ் ஆஃப் ஸ்ட்ரெந்த் ( 26/11 Stories of Strength) நிகழ்வின் முக்கிய பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மும்பை தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்பித்து வந்த 100க்கும் மேற்பட்ட மக்களின் கருத்துகளை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பதிவு செய்து வந்தது தி இந்தியன் எக்ஸ்பிரஸ். அவர்களின் துணிச்சல், மன்னிக்கும் பண்பு, தன்னம்பிக்கை குறித்து இந்த பதிவுகள் அனைத்தும் அமைந்தது. இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் பெருமிதம் கொள்கிறது. 26/11 மும்பையின் கறுப்பு நாள். இந்த தாக்குதலில் மக்களை காப்பாற்ற எத்தனையோ காவலர்கள் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Live Blog
26/11 Mumbai Attack 11th Anniversary Updates: 26/11 எனும் மும்பை தீவிரவாத தாக்குதலின் 11வது நினைவு ஆண்டு
20:27 (IST)26 Nov 2019
தேசிய கீதத்துடன் நிறைவு

26/11 #StoriesOfStrength நிகழ்வு தேசிய கீதத்துடன் நிறைவுப் பெற்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, அமித் ஷா, அமிதாப் பச்சன், ஆனந்த் கோயங்கா என அனைவரும் மேடையில் திரள, தேசிய கீதம் இசைக்கப்பட்டு 11வது ஆண்டு நினைவு தினம் முடிவுக்கு வந்தது.

20:18 (IST)26 Nov 2019
நெகிழ வைத்த அமிதாப் பச்சன் குழு

நிகழ்வின் இறுதிப் பகுதியாக அமிதாப் பச்சன் மற்றும் அவரது குழுவின் இசை மற்றும் நடனம் அனைவரின் மனதிலும் தேசப் பற்றை பெருக்கெடுத்து ஓட வைத்தது. 

20:07 (IST)26 Nov 2019
26/11 #StoriesOfStrength நிகழ்வில் ராஜ்நாத் சிங்

"26/11 அன்று என்ன நடந்தது என்பதை யாராலும் மறக்க முடியாது. நாம் இழந்த உயிர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு குடிமகனாலும் நினைவுகூரப்படுகின்றன," - @rajnathsingh

19:56 (IST)26 Nov 2019
என்.எஸ்.ஜி கமாண்டோ கஜேந்திர பிஸ்டின் மகளுடன் உரையாடிய போது...

@ vickykaushal09 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த என்.எஸ்.ஜி கமாண்டோ கஜேந்திர பிஸ்டின் மகள் ப்ரீத்தி பிஸ்டுடன் உரையாடிய போது,

.@vickykaushal09 speaks to Preeti Bhist, the daughter of NSG Commando Gajendra Bhist who got injured in the 26/11 Mumbai terror attacks. #2611StoriesOfStrength#StoriesOfStrength


Watch it LIVE here: https://t.co/fYjmnofnYo pic.twitter.com/NEhog9UUzm


— The Indian Express (@IndianExpress) November 26, 2019


19:54 (IST)26 Nov 2019
26/11 Stories of Strength சிறப்பு புகைப்படங்கள்

26/11 Stories of Strength ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு 

19:44 (IST)26 Nov 2019
26/11 Stories of Strength நிகழ்வில் அபிஷேக், ஐஸ்வர்யா

26/11 Stories of Strength நிகழ்வில் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் அவரது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராயும் வருகை தந்த போது, 

19:31 (IST)26 Nov 2019
நான் பின்பற்றும் ஒரே மதம் அன்பு

பாடகி ரேகா பரத்வாஜ்  பேசுகையில், "நான் பின்பற்றும் ஒரே மதம் அன்பு மட்டுமே" என்று தெரிவித்தார். பிறகு, அவரது குரலில் அங்கு இசை மழை பொழிய, மீண்டும் அங்கு நிசப்தம்

19:18 (IST)26 Nov 2019
ஹீரோக்களுடன் உரையாடும் ராதிகா ஆப்தே

நடிகர் ராதிகா ஆப்தே  26/11 தாக்குதலின் போது கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய 'ஹீரோக்களுடன்' பேசுகிறார். 'சீருடையின் சக்தியே மக்களை காப்பாற்றவும் உதவவும் செய்தது' என்று அந்த மோசமான தினத்தின் போது தனது நோயாளிகளை கவனித்துக் கொண்ட செவிலியர் கூறுகிறார்.


19:10 (IST)26 Nov 2019
ஹேமந்த் கர்காரேவின் தியாகம் வீண் போகாது

பயங்கரவாத எதிர்ப்புக் காவல்படையின் அதிகாரி ஹேமந்த் கர்காரே 2011ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது எதிரிகளுடன் சண்டையிட்டு அதில் வீரமரணம் அடைந்தார்.

கட்காரி பேசுகையில், 'ஹேமந்த் கர்காரேவின் தியாகம் வீண் போகாது' என்றார்.

18:50 (IST)26 Nov 2019
மும்பை மக்களை வணங்குகிறேன் - கட்காரி

விழா மேடையில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, 'மும்பை மக்கள் மீண்டு வந்ததற்கு நான் தலை வணங்குகிறேன்' என்று தெரிவித்தார். 

18:32 (IST)26 Nov 2019
அனந்த் கோயங்கா உரை

இந்தியன் எக்ஸ்பிரஸின் நிர்வாக இயக்குனர் அனந்த் கோயங்கா உரையாற்றினார்

18:30 (IST)26 Nov 2019
26/11 Stories of Strength நிகழ்வின் ஸ்பெஷல் புகைப்படங்கள்

18:27 (IST)26 Nov 2019
26/11 Stories of Strength நிகழ்வின் சிறப்பு புகைப்படங்கள்

18:19 (IST)26 Nov 2019
கவிதைகளால் மரியாதை செலுத்திய அனுஷ்கா ஷர்மா

26/11 Stories of Strength’ நிகழ்வில், ஜவான்களுக்கு கவிதைகள் மூலம் மரியாதை செலுத்திய நடிகை அனுஷ்கா ஷர்மா,

18:08 (IST)26 Nov 2019
ஜவான்கள் அனைவருக்கும் மரியாதை

இந்திய கப்பற் படையுடம் இணைந்து இசை மழை பொழிந்த சிங்கர் திவ்யா குமார், "நம் நாட்டின் ஜவான்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துவோம்" என்றார். 

17:55 (IST)26 Nov 2019
கப்பற்படையின் பேண்ட் இசை

'26/11 Stories of Strength’ நிகழ்வில் பேண்ட் இசைக்கும் கப்பற்படை வீரர்கள்

17:49 (IST)26 Nov 2019
மும்பை காற்றில் இழைந்தோடும் இசை

மகாராஷ்டிரா காவல்துறையின் இசை நிகழ்ச்சி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 

17:47 (IST)26 Nov 2019
இந்தியன் எக்ஸ்பிரஸின் Stories of Strength நிகழ்வு தொடங்கியது

26/11 எனும் மும்பை தீவிரவாத தாக்குதலின் கொடூர சம்பவத்தின் 11வது நினைவு ஆண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸின் ’26/11 Stories of Strength’ நிகழ்வு தொடங்கியது.

Web Title:26 11 mumbai attack 11th anniversary live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X