Advertisment

நீங்க ரயில்வே டி.டி.இ., இந்த ரயில்களை எண்ணுங்க.. டெல்லியில் ஏமாந்த 28 தமிழர்கள்!

டெல்லியில் வேலைவாய்ப்பு மோசடி.. டி.டி.இ. என நினைத்து ரயில்களை எண்ணிய தமிழர்கள்!

author-image
WebDesk
New Update
28 people made to count trains at New Delhi Railway Station

டெல்லி ரயில்வே வேலை மோசடி தற்போது அம்பலமாகியுள்ளது.

தேசிய தலைநகர் டெல்லியில் நடந்த இந்த வேலை வாய்ப்பு மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெல்லியை சேர்ந்த சிலர், பயண டிக்கெட் பரிசோதகர் (TTE), எழுத்தர்கள் மற்றும் போக்குவரத்து உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்க்கை நடைபெறுவதாக கூறியுள்ளனர்.

இதை நம்பி அங்கு போன தமிழர்கள் சுமார் 28 பேரிடம் ரூ.2 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை லஞ்சமாக பெற்றுள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு வேலை அளித்துள்ளனர்.

Advertisment

அதன்படி, பயண டிக்கெட் பரிசோதகர் (TTE) என நம்பிய நபர்களை டெல்லி ரயில் நிலையத்தில் ஓடும் ரயில்களை எண்ண சொல்லியுள்ளியுள்ளனர். அவர்களும் இது தான் முதல்கட்ட பயிற்சி என நம்பி, ரயில் வந்த நேரம், சென்ற நேரம் உள்ளிட்டவற்றை குறிப்பெடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்த அவர்கள் முன்னாள் ராணுவ வீரர் எம்.சுப்புசாமி என்பவரிடம் உதவி கோரியுள்ளனர்.

அவர் இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

முன்னாள் ராணுவ வீரர் எம்.சுப்புசாமி அளித்துள்ள புகாரில், “இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில், மொத்தம் ரூ.2.67 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Delhi Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment