Advertisment

ஓரினச் சேர்க்கை குற்றமில்லை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு பரபரப்பு தருணங்கள்

IPC Section 377 Verdict : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்திய தண்டனைச் சட்டம் 377

இந்திய தண்டனைச் சட்டம் 377

இந்திய தண்டனைச் சட்டம் 377  :  ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என இன்று இந்திய உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது. இது தொடர்பாக தண்டனையை வரையறுத்த இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

Advertisment

உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு மூலமாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ரத்து செய்யப்பட்டதால், தன் பாலின சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாடு முழுவதும் இதை கொண்டாட்டமாக முன்னெடுத்தனர்.

இந்திய தண்டனைச் சட்டம் 377 ( Section 377 Supreme Court  Verdict ) நேரம் வாரியாக நிகழ்வுகள்:

இதுவரை நடைமுறையில் இருந்த இந்திய தண்டனைச் சட்டம் 377வது பிரிவின் படி, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது இயற்கைக்கு மாறான குற்றமாகும். இதன்படி வயது வந்த இரண்டு ஆண்களோ பெண்களோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் வழங்கப்படும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது.

இந்திய தண்டனைச் சட்டம் 377

02.00 pm : வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்த தீர்ப்பினை வரவேற்றுள்ளது ஐக்கிய நாடுகள் சபை.

12. 40 pm: ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய இவ்வளவு கால தாமதம் எடுத்துக் கொண்டது - இந்து மல்ஹோத்ரா

12. 30 pm: தீபக் மிஸ்ராவினைத் தொடர்ந்து தன்னுடைய தீர்ப்பினை வாசித்தார் ஆர்.எஃப். நாரிமன். மன நலமருத்துவச் சட்டம் குறித்து தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். மேலும் பாராளுமன்றத்திலும் கூட ஓரினச் சேர்க்கை ஒரு நோயல்ல என்று குறிப்பிடப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார்.

தன்பாலின ஈர்ப்பு புரிதல் உடையவர்கள் இந்த சமூகத்தில் மிகவும் மரியாதையுடன் வாழும் தகுதி உடையவர்களே என்றும் அவருடைய தீர்ப்பில் கூறியுள்ளார்.

12.06 pm : ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட உரிமையை இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருப்பது என்றும், தனிமனித சுதந்திரத்தை காக்கும் அளவிற்கு ஜனநாயகம் வளர்ந்துள்ளது என்றும் தீபக் மிஸ்ரா தீர்ப்பு

11. 50 am : இந்திய குற்றவியல் சட்டம் 377 சட்டப்பிரிவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

11. 45 am : ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதும் அரசியல் சாசனச் சட்டம் 377ற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பின் நகலை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வாசிக்கிறார்.

11. 40 am : தீபக் மிஸ்ரா தலைமையில் இருக்கும் ஐவர் கொண்ட நீதிமன்ற அமர்வு நான்கு தனித்தனி தீர்ப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11.30 am : இந்த சட்டத்தில் மாற்றத்தினை கொண்டுவர வேண்டும் என்று கூறிய மனுதாரர்களில் ஒருவரான கேஷவ் சூரி நீதிமன்றம் வருகை.

இந்திய தண்டனைச் சட்டம் 377, ஓரினச் சேர்க்கையாளர்கள் உச்ச நீதிமன்றம் வந்த மனுதாரர் கேஷவ் சூரி

11.00 am : இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கியமான சட்டம் குறித்த தீர்ப்பு இன்னும் சிறிது நேரத்தில் வெளியாக உள்ளது. அதற்கான பிரத்யேக தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க உச்ச நீதிமன்ற வளாகத்தில் குவிந்தார்கள் ஊடகவியலாளர்கள்.

10. 30 am : இதுவரை இந்திய குற்றவியல் சட்டம் 377 பயணித்த பாதை குறித்த காணொளி

10.00 am: 377ல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என மனுத்தாக்கல் செய்தவர்கள் நடனக் கலைஞர் நவ்தேஜ் ஜௌஹர், பத்திரிக்கையாளர் சுனில் மெஹ்ரா, சமையற்கலைஞர் ரித்து தால்மியா, ஓட்டல் உரிமையாளர்கள் அமன் நாத் மற்றும் கேசவ் சூரி, மற்றும் தொழிலதிபர் அயிஷா கபூர் ஆவார்கள்.

9.30 am: இந்திய குற்றவியல் சட்டம் 377 என்றால் என்ன ? 

1861ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது இச்சட்டம். ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கிறது. இச்சட்டத்தின் கீழ் சிலருக்கு ஆயுள் தண்டனையும் வழங்க வழி வகை செய்கிறது இச்சட்டம். இச்சட்டம் பற்றி மேலும் படிக்க 

8.40 am : உங்கள் குழந்தைகளின் விருப்பத் தேர்விற்கு மதிப்பளியுங்கள். பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த புரிதல்கள் மற்றும் பேச்சுகள் இன்றளவும் நம் சமூகத்தில் ரகசியம் என்றும், வெளிப்படையாக பேசுதல் தவறு என்றும் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வருகின்றோம். பெற்றோர்களாக நாம் நம் பிள்ளைகளுக்கு இதனையே கற்பிக்கின்றோம். இது தொடர்பாக சமூக சிந்தனையாளர் மற்றும் தன் பாலின ஈர்ப்பு ஆதரவாளார் கேஷவ் சூரி எழுதிய கட்டுரையைப் படிக்க

8. 30am :  இந்திய தண்டனைச் சட்டம் 377  கடந்து வந்த பாதை :

2009ல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமில்லை என்று கூறியது டெல்லி உயர் நீதிமன்றம்.

2013ல் இந்த தீர்ப்பின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது உச்ச நீதிமன்றம். அதில் கடந்த 2013ல் அளித்த தீர்ப்பில்,` ஓரினசேர்க்கையில் ஈடுபடுவது குற்றச்செயல்’ என அதிரடியாக உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடனக்கலைஞர் நவ்தீஜ் ஜவ்கர் உள்பட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய் சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைகள் மேற்கொண்டது.

அப்போது நீதிபதி சந்திரசூட் “சட்டம் 377இன் படி பொது இடங்களில் ஓரினச்சேர்க்கையாளர்களை அச்சறுத்தும் நிலையை நாங்கள் உருவாக்கவில்லை” என்று கூறினார்.

Supreme Court Lgbt
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment