Advertisment

புதுவை தனியார் மெடிக்கல் கல்லூரிகளில் 778 மாணவர்கள் சேர்க்கை ரத்து

புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 778 மாணவர்களை சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kiren bedy

புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த 778 மாணவர்களின் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது. மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் அது தெரிவித்துள்ளது.

Advertisment

ஏழு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் நடக்கவில்லை என இந்திய மருத்துவ கவுன்சிலின் செப்டம்பர் 7-ம் தேதி எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. 

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு எழுதிய கடிதம் காரணமாக, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மாணவர்கள் சேர்க்கையில் பணத்திற்கு தகுதி தியாகம் செய்யப்பட்டுள்ளது என கிரண்பேடி குற்றம் சாட்டி இருந்தார். மோசடி நடைபெற்றது என குற்றம் சாட்டி பெற்றோர்கள் புகார் தெரிவித்தது தொடர்பாக கிரண்பேடி விசாரணைக்கு உத்தரவிட்டதில் கடந்த 2016-ம் ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 1,200 மாணவர்கள் சேர்ந்தது தெரியவந்தது. 

நீட் தேர்வு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு கண்டும் காணாதது போல் 778 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளது தெரியவந்தது. 

நீட் கட்டாயம் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு 2016-ல் அனைத்து மாநிலங்களும் வெற்றிகரமான மாணவர்களின் பட்டியலை தயாரிப்பதற்கான ஆலோசனைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களையும் ‘நீட்’ நுழைவுத்தேர்வு மூலம் தான் நிரப்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 

புதுச்சேரியில் மொத்தம் 1,200 மருத்துவ இடங்கள் உள்ளது. இதில் தனியார் கல்லூரிகளிலே அதிகமான இடங்கள் உள்ளது. புதுச்சேரியில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் 283 இடங்கள் உள்ளது. 767 இடங்கள் இந்தியா முழுவதும் இருந்து வரும் மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் கடந்த வருடம் அம்மாநில அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் 280 இடங்கள் நிரப்பப்பட்டது. மீதம் இருந்த மூன்று இடங்கள் மத்திய பட்டியலில் இணைக்கப்பட்டது. இதனையடுத்து 770 ஆக உயரந்தது. அனைத்து இந்திய இட ஒதுக்கீட்டின் கீழ் 770 இடங்களும் மாநில இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 8 இடங்களும் மோசடியாக நிரப்பப்பட்டு உள்ளது என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

புதுச்சேரி மாநில அனைத்து சென்டாக் மாணவர்கள்- பெற்றோர் சங்க தலைவர் நாராயணசாமி, கிரண் பேடிக்கு இவ்விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதினார். மாணவ சேர்க்கையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் ஒட்டுமொத்த வழிமுறையும் மீறப்பட்டு உள்ளது என நராயணசாமி கூறியிருந்தார். நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டு உள்ளது. மதிப்பெண்களை விட பணம் முன்னுரிமை பெற்று உள்ளது என குறிப்பிட்டு இருந்தார். 

கிரண் பேடி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு எழுதிய கடித்ததில், “தனியார் மருத்துவ கல்லூரிகளின் கையில் தகுதியானது (மெரிட்) பாதிக்கப்பட்டு உள்ளது,” என குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் சென்டாக் மூலம் சேர்ந்த மாணவர்கள் தவிர்த்து பிற மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்யப்படுகிறது என்ற தகவலை இந்திய மருத்துவ கவுன்சில் செப்டம்பர் 7-ம் தேதி புதுச்சேரி தலைமை செயலாளரிடம் தெரிவித்து உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிற்கு எதிராக மாணவர்கள் கோர்ட்டை நாட முடியும். கடந்த 2016-ம் ஆண்டும் 4 மாநிலங்களில் 519 மாணவர்களின் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்தது, ஆனால் கல்லூரிகள் கோர்ட்டை நாடி தீர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment