இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் திங்கள்கிழமை, தற்காலிக போலீஸ் தலைவர்கள் நியமனம் குறித்தான வழக்கை எடுத்தது. அதில் இதுகுறித்தான 3 மனுக்களை ஒருங்கிணைத்து, எட்டு மாநிலங்களுக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. அக்.21க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் அவமதிப்பு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய உள்துறை அமைச்சகம் (எம்ஹெச்ஏ) மற்றும் மத்திய அரசுப் பணியாளர்கள் கமிஷன் உள்பட ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், பீகார், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
தகுதியான அதிகாரிகள் இருந்தும், வழக்கமான முறையில் டி.ஜி.பிகளை நியமிக்காத மாநில அரசுகளின் போக்கு அதிகரித்து வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 1 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.
3 மனுக்களில் வினோத் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர்நாராயணன் ஆஜரானார். மற்றொரு மனுதாரரான நரேஷ் மகானியின் வழக்கில் மூத்த வழக்கறிஞர் மாதவி திவான் வாதிட்டார்.
எதிர்மனுதாரர்கள் சார்பில் கபில் சிபல், முகுல் ரோகத்கி, ஹுசெபா அகமதி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.
உத்தரவுகளை பிறப்பிக்கும் போது, எம்ஹெச்ஏ மற்றும் யுபிஎஸ்சியின் மூத்த அதிகாரிகளைத் தவிர, மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிகள் உட்பட எதிர்மனுதாரர்களின் தனிப்பட்ட பிரசன்னத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆனால், அந்த நோட்டீஸ்களை மாநில அரசுகளின் நிலையான வழக்கறிஞருக்கு வழங்க அனுமதி அளித்துள்ளது. இதே விவகாரத்தில் வழக்கறிஞர் சாவித்ரி பாண்டே தாக்கல் செய்த ரிட் மனு மீது ஏழு மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய சில நாட்களுக்குப் பிறகு இந்த நோட்டீஸ்கள் வந்துள்ளன. இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிமன்றம் ஒருங்கிணைத்து விசாரிக்க உள்ளது.
வினோத் குமார் தாக்கல் செய்த மனுவில், இரண்டு ஆண்டுகளுக்கு வழக்கமான டிஜிபிகளை நியமிக்கக் கோரிய பிரகாஷ் சிங் வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்மனுதாரர்கள் "வேண்டுமென்றே" மீறியுள்ளனர் என்று வாதிடப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“