Advertisment

இனி பயமே இல்லை... உங்க ஆதாரை யாரும் மிஸ் யூஸ் பண்ணாம இப்படி 'செக்' வைக்கலாம்!

how to get Aadhaar card past usage tamil news: கடந்த 6 மாதங்களில் ஆதார் எண் மூலம் நிகழ்த்தப்பட்ட அனைத்து அங்கீகார பதிவுகளின் விவரங்களையும் ஆதார் எண் வைத்திருப்பவர் காணலாம்.

author-image
WebDesk
New Update
Aadhaar card update tamil news how to get Aadhaar card past usage and how to get Aadhar usage history

Aadhaar card update news in tamil

Aadhaar card update: இந்திய குடிமக்கள் ஒவ்வொருக்கும் ஆதார் அவசியம் என்று இந்திய ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆதார் இல்லாத குடிமகக்ளுக்கு ஆதார் வழங்கியும் வருகிறது.

Advertisment

இந்த நிலையில் ஏற்கனவே ஆதார் வைத்துள்ள நபர்கள், அவர்களின் ஆதார் அட்டை எங்கேல்லேம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது பற்றிய தகவல்களை சேகரித்துக் கொள்ள புதிய அப்டேட்டையை தற்போது வழங்கியுள்ளது. அதன்படி உங்களுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி ஆதார் அங்கீகார வரலாற்றை யுஐடிஏஐ வலைத்தளங்களிலிருந்து பெறலாம். உங்களுடைய வரலாற்றை பெறுவதற்கு அந்த வலைத்தளத்தில் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் இந்த சேவையைப் பெற பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயமாகும்.

கடந்த 6 மாதங்களில் ஆதார் எண் மூலம் நிகழ்த்தப்பட்ட அனைத்து அங்கீகார பதிவுகளின் விவரங்களையும் ஆதார் எண் வைத்திருப்பவர் காணலாம். அதோடு அதிகபட்சமாக 50 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும்.

கீழ் காணும் அனைத்து அங்கீகார பதிவுகளின் விவரங்களையும் ஆதார் எண் வைத்திருப்பவர் காணலாம்:

1. அங்கீகார முறை.

2. அங்கீகாரத்தின் தேதி மற்றும் நேரம்.

3. யுஐடிஏஐ (UIDAI) மறுமொழி குறியீடு.

4. அங்கீகார பயனர் நிறுவனம் பெயர்

5. அங்கீகார பயனர் நிறுவனம் பரிவர்த்தனை ஐடி (குறியீட்டைக் கொண்டு)

6. அங்கீகார பதில் (வெற்றி / தோல்வி)

7. யுஐடிஏஐ (UIDAI) பிழை குறியீடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பின் மூலம் உங்கள் ஆதார் அட்டை எப்போது, ​​எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பது பற்றிய 'ஆதார் அங்கீகார வரலாறு' முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் யுஐடிஏஐ (UIDAI) -யின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கமான uidai.gov.in க்குச் செல்லவும். ‘எனது ஆதார்’ என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில் (எனது ஆதார்) ஆதார் சேவைகளைப் பார்க்கவும். அங்கு நீங்கள் ‘ஆதார் அங்கீகார வரலாறு’ என்பதை நீங்கள் காணலாம். இப்போது, ​​‘ஆதார் அங்கீகார வரலாறு’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட வேண்டும்.

இப்போது, ​​உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச் சொல் ஒன்று (OTP) அனுப்பப்படும். அந்த கடவு எண்ணை (OTP ஐ) அதில் உள்ளிடவும். பின்னர் இரண்டு விருப்பங்களைக் கொண்ட புதிய சாளரம் திறக்கும்: ‘அங்கீகார வகை’ மற்றும் ‘தரவு வரம்பு’. ஆதார் பயன்பாடு தொடர்பான அனைத்து தகவல்களையும் சமர்ப்பிப்பதன் மூலம் உங்களுடைய முழு அங்கீகார வரலாறு விபரங்ககளையும் பெறுவீர்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Aadhaar Card Aadhaar Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment