Advertisment

பான் - ஆதார் எண் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு: விட்டுப் பிடிக்கும் மத்திய அரசு!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நாளையுடன் (ஆகஸ்ட் 31) முடிவடைய இருந்த நிலையில், வரும் டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
பான் - ஆதார் எண் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு: விட்டுப் பிடிக்கும் மத்திய அரசு!

மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, வங்கிகணக்கு, பான் கணக்கு உள்ளிட்டவையுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் போலி பான் கார்டுகள் நீக்கப்படும் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது. இதையடுத்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது. இதனால், ஏராளமானோர் வருமான வரித்துறை இணைய தளத்தில் முட்டி மோதியதால், அந்த இணைய தளம் முடங்கியது.

Advertisment

மத்தய அரசின் இந்த உத்தரவிற்கு ஆட்சேபம் தெரிவித்த வருமான வரித் தாக்கல் செய்யும் பெரும்பாலானவர்கள், தங்களுக்கு ஆதார் எண்ணை பான் கார்டு எண்ணுடன் இணைப்பதற்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர், கூடவே, வருமான வரித்தாக்கல் செய்யும் நபர்களின் ரகசியங்கள் திருடு போவதால் அவர்களின் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு சில தனியார் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தனர்.

இதற்கு வலுச் சேர்ப்பதுபோல, சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திரசிங் தோனி ஆகியோரின் ரகசியங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதனை எதிர்த்து தனியார் நிறுவனங்கள், தனி நபர்களின் ரகசியங்கள் திருடு போவதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தன.

உச்ச நீதிமன்றமும், தனி நபர்களின் ரகசியம் காக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், அதே சமயத்தில் மத்திய மாநில அரசுகளின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்த திட்டங்களின் பயன்களை பெறுவதற்கும் ஆதார் அவசியம் எனவும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நாளையுடன் (ஆகஸ்ட் 31) முடிவடைய இருந்த நிலையில், வரும் டிசம்பர் 31 வரை காலக்கெடுவை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ஆதார் தொடர்பான வழக்கில் அந்தரங்க தகவல்கள் அடிப்படை உரிமை என கடந்த வாரம் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நிலையில் ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் பிறகு ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இணைக்காதோர், income taxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் 'linkaadhaar' என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்து, அதில் கூறப்பட்டுள்ள வகையில், இரு எண்களையும் இணைக்க முடியும். மொபைல் போனில், UIDPAN என டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு, ஆதார் எண், மீண்டும் இடைவெளி விட்டு பான் எண் ஆகியவற்றை டைப் செய்து 567678 அல்லது 56161 ஆகிய எண்களுக்கு அனுப்பினால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துவிடலாம்.

Supreme Court Central Government Income Tax
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment