நான் ஏன் ஆதார் எண்ணை ட்வீட் செய்தேன் - என்ன சொல்கிறார் ட்ராய் சேர்மன்?

ஆதார் குறித்த பாதுகாப்பினை நிரூபிப்பது என் கடமை என்று நினைத்தேன் - ஆர். எஸ். ஷர்மா

ஆதார் எண் சவால் ( Aadhaar Number Challenge ) பற்றி பேசும் ட்ராய் சேர்மன் ஆர். எஸ். சர்மா

Aadhaar Number Challenge : ஆதார் எண்ணை சமர்பிக்கக் கோரி மக்களிடம் கேட்கும் போது, மக்கள் அச்சமடைகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. சில இடங்களில் அரசு ஆவணங்கள் லீக்காகும் போது, எடுத்துக்காட்டாக பிஎஃப் டேட்டா சமீபத்தில் கசிந்தது.

ஆனால் அதையும் கூட “ ஆதார் தகவல் கசிந்தது “ என்று தான் முன்வைக்கிறார்கள். ஏன் என்றால் பிஎஃப் ஆவணங்களில் ஆதார் எண் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேலும் #destroyAadhaar என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆவதும் வாடிக்கையாகிவிட்டது.

எங்கோ யார் வீட்டுப் பணமோ திருடு போனால் ஆர்பிஐ வங்கியின் தகவல்கள் கசிந்துவிட்டது என்று கூறுவது போல் இருக்கிறது இந்த குற்றச்சாட்டுகள்.

எப்படி உருவானது Aadhaar Number Challenge ?

ஆதாரில் இருக்கும் அடிப்படை தகவல்களைக் கொண்டு எந்த ஒரு தவறும் நடப்பதற்ஆன வாய்ப்புகள் இல்லை. இது குறித்து சமீபத்தில் நான் கொடுத்த பேட்டியிலும் குறிப்பிட்டிருந்தேன்.

இதனை படித்து அறிந்து கொண்ட என்னுடைய ட்விட்டர் பாலோவர் ஒருத்தர் “உங்களுக்கு ஆதார் பாதுகாப்பு குறித்து அத்தனை நம்பிக்கை இருந்தால் உங்கள் ஆதார் எண்ணை வெளிப்ப்டையாக ட்வீட் செய்யுங்கள் என்றார்.

அவர் கூறியதை பரிசீலனை செய்து நான் என்னுடைய ஆதார் எண்ணை பதிவு செய்தேன். அப்படி தான் Aadhaar Number Challenge உருவானது.

ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை ஹேக் செய்த பிரான்ஸ் நாட்டு ஹேக்கர் 

Aadhaar Number Challenge மீதான விமர்சனங்கள்

நான் Aadhaar Number Challenge – ஐ ஏற்றுக் கொண்டு என்னுடைய ஆதார் எண்ணை பதிவு செய்தவுடன் என்னுடைய தோழர்கள் மிகவும் கவலை அடைந்துவிட்டனர். நான் எதிர்பார்க்கவே இல்லை, இது இவ்வளவு பெரிய வைரல் ஆகும் என்று.

ஹேக்கர்கள் மற்றும் ஃபாலோவர்களால் பிரச்சனை உருவாவதிற்கு வாய்ப்புகள் அதிகம் என்று அஞ்சினார்கள் அவர்கள்.

அவர்களுக்கு கூறுவது என்னவென்றால் – ஆதார் என் வாழ்வில் மிக முக்கிய பங்கினைப் பெற்றிருக்கிறது. மேலும் எனக்கு தெரியும் ஆதார் எண்ணை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது என்று.

Aadhaar Number Challenge, RS Sharma

UIDAI அமைப்பில் நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆதார் என்பது எப்படியான அதிசிறந்த தொழில்நுட்பவாதிகளால் உருவாக்கட்டும் அமைப்பு என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

ஆகவே ஆதார் பற்றி நிரூபிப்பது என்னுடைய கடமை என்று உணர்ந்த பின்பே இந்த சவாலினை ஏற்றுக் கொண்டு என்னுடைய ஆதார் எண்ணை பதிவு செய்தேன்.

ஆதார் என்பது இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் பொருட்டு உருவாக்கப்பட்டது. அதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.

ஆதார் அடையாள அட்டை வந்த பின்பு, வரி ஏய்ப்பு செய்கின்றவர்கள் மற்றும் பினாமியில் சொத்துக்களை குவிப்பது குறைந்திருக்கிறது. ஆதார் அவர்களை பயமுறுத்தி வைத்திருக்கிறது. ஆக ஆதார் எண்ணை மற்ற முக்கியமான இடங்களில் தருவதால் உங்களுக்கு எவ்வகையிலும் பாதிப்பு இல்லை.

ஹேக்கிங்கிற்கு வழி வகை செய்த Aadhaar Number Challenge

aadhaar Number Challenge, RS Sharma

இரண்டு நாட்களாக வேலை ஏதும் இல்லாமல், என்னுடைய ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.

இதில் மிகவும் சுவாரசியமான ஒரு செய்தி என்னவென்றால் ஹேக் செய்ய முயற்சி செய்த ஒருவர் என்னுடைய வங்கிக் கணக்கில் ஒரு ரூபாயினை டெபாசிட் செய்துவிட்டு சென்றுள்ளார்.

இப்படி டெபாசிட் செய்வதாக இருந்தால், இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் அக்கவுண்ட்டினை ஹேக் செய்யச் சொல்லி கேட்பார்கள்.

ஆனால் அத்தனை முயற்சிகளிலும் தோல்வி அடைந்து அவர்களுடைய நேரத்தினை வீண் செய்துவிட்டார்கள். இறுதியாக நான் என்னுடைய Aadhaar Number Challenge – ல் வெற்றி பெற்றுவிட்டேன்.

ட்ராய் அமைப்பின் சேர்மன் மற்றும் ஆதார் அமைப்பில் பணியாற்றிய ஆர்.எஸ். ஷர்மா இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிற்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close