Advertisment

‘எம் ஆதார்’: எங்கும் பயன்படுத்தலாம்; இது ஆதார் அட்டையைவிட முக்கியமானது!

Aadhaar card latest update : ஆதார் கார்டில் புதிய அப்டேட்ட குறித்து ஆதார் சேவை மையம் (UIDAI) தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
m aadhaar

Aadhaar card latest update : இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கு ஆனார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆவண சரிபார்ப்பு, முகவரி ஆதாரம், கே.ஒய்.சி செய்து முடித்தல் மற்றும் அரசாங்க சலுகைகளைப் பெறுதல் ஆகியவை முக்கிய தேவைகளுக்கு ஆதார் கார்டு முக்கிய ஆதாரமாக தேவபைபடுகிறது. இந்த ஆதார் அட்டையில், திருத்தங்கள் செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளது போல, 35 க்கும் மேற்பட்ட ஆதார் சேவைகளை உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் வகையில், யுஐடிஏஐ (UIDAI)உங்களுக்கு வழங்குகிறது

Advertisment

உங்கள் ஸ்மார்ட்போனில் எம்ஆதார் ஆப் (mAadhaarApp) பதிவிறக்கம் செய்வதன் மூலம், ,ஆதார், புதுப்பிப்பு நிலை, ஆதார் கேந்திரா போன்ற ஆதார் சேவைகளைப் பயன்படுத்தலாம். #MAadhaarApp ஐ பதிவிறக்குக செய்ய: https://tinyurl.com/yx32kkeq (Android) https://tinyurl.com/taj87tg (iOS) என்பதை பயன்படுத்தி இந்த ஆப் பதிவிறக்கம் செய்யலாம்.

எம் ஆதார் (mAadhaar) என்பது ஒரு  ஆதார் அட்டையை விட முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த எம் ஆதாரை பயன்படுத்தி இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களிலும், புதிதாக வெளியிடங்களில் குடியேறுபவர்கள், தங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் சரிபார்ப்பைத் தேடும் சேவை வழங்குநர்களுடன் தங்கள் eKYC அல்லது QR குறியீட்டைப் பகிர்ந்து கொள்வது போன்ற ஆதார் சேவைகளை பெற எம் ஆதார் அம்சங்களைப் பயன்படுத்தலாம்.

ஆனால், உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற  விவரங்களை மாற்றியமைக்க எம் ஆதாரில் வசதி வழங்கவில்லை. ஒருவரின் பதிவுசெய்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதார் அட்டையும், தனது ஸ்மார்ட்போனில், எம் ஆதார் (mAadhaar) பயன்பாட்டில் ஆதார் சுயவிவரத்தை உருவாக்க முடியும். இதில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் வேறு ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தலாம். அத்தகைய நபர்கள் எந்த ஸ்மார்ட்போனிலும் நிறுவப்பட்ட பயன்பாட்டில், OTP அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு மட்டுமே அனுப்பப்படும்.

12 இலக்க அடையாள எண் கொண்ட ஆதார் UIDAI (“அதிகாரம்”) அட்டையை பெற இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு தனிநபரும், வயது மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல், பதிவு செய்யலாம். பதிவுசெய்ய விரும்பும் நபர், பதிவுசெய்தல் செயல்பாட்டின் போது குறைந்தபட்ச பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டும், இந்த சேவை முற்றிவும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Uidai Aadhaar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment