Advertisment

”சூரியனைப் போல் மிளிர, அதைப் போல் எரிய வேண்டும்” - நெட்டிசன்கள் நினைவுக் கூர்ந்த அப்துல் கலாம் பிறந்தநாள்!

Abdul Kalaam Birth Anniversary: முன்னாள் ஜனாதிபதி எழுதிய புத்தகங்களிலிருந்து மேற்கோள்களைப் பகிர்ந்து, அவரை நினைவுக் கூர்ந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
APJ Abdul Kalam

Tn live updates : kalam birhtday

Abdul Kalam Birth Anniversary: முன்னாள் ஜனாதிபதியும், நாட்டின் ஏவுகணைத் திட்டத்தின் அடித்தள அமைப்பாளருமான ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 88-வது பிறந்தநாள் நேற்று நினைவுகூறப்பட்டது. கலாமை நினைவுக் கூர்ந்து அரசியல்வாதிகளும், நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டனர்.

Advertisment

பலரால் போற்றப்படும், மறைந்த தலைவர் கலாம், இஸ்ரோ-வில் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு) தான் அளித்த பங்களிப்புக்காக மட்டுமல்லாமல், மாணவர்கள் மீதான அன்பு, கல்வியை மேம்படுத்த அவர் கொண்ட முயற்சிகளுக்காகவும் அறியப்படுகிறார்.

1998-ஆம் ஆண்டில் போக்ரான் -2 அணுசக்தி சோதனைகளில் முக்கிய பங்கு வகித்த புகழ்பெற்ற விஞ்ஞானியான அப்துல் கலாம் மீது தங்களது அபிமானத்தை வெளிப்படுத்தினர் நெட்டிசன்கள். அதோடு 'இந்திய ஏவுகணை நாயகன்' என்ற பெயரைப் பெற்ற, முன்னாள் ஜனாதிபதி எழுதிய புத்தகங்களிலிருந்து மேற்கோள்களைப் பகிர்ந்து, அவரை நினைவுக் கூர்ந்தனர்.

நெட்டிசன்கள் ஏவுகணை மனிதரை நினைவுக் கூர்ந்த சில ட்வீட்களை இங்கே இணைக்கிறோம். 

”சூரியனை போல ஒளிர வேண்டுமென்றால், முதலில் சூரியனை போல எரிய வேண்டும்”

”வெற்றி என்பது உங்கள் கையெழுத்து ஆட்டோகிராஃபாக மாறும் தருணம் தான்”

”இன்று உன்னை காயப்படுத்துவது தான் நாளை உன்னை வலிமையாக்கும்”

போன்ற அப்துல் கலாமின் பொன்மொழிகளைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் அவரது பிறந்தநாளை நினவுக் கூர்ந்தனர்.

Abdul Kalam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment