Advertisment

சபரிமலைக்கு செல்ல முயன்ற ரஹானா பாத்திமாவுக்கு கட்டாய ஓய்வு : பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிசியன் ஆக பணியாற்றிய அவர் ஐயப்பன் கோவில் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rehana Fathima, Sabarimala issue, ரெஹானா ஃபாத்திமா, ரெஹானா பாத்திமா

Rehana Fathima, Sabarimala issue

Activist Rehana Fathima Who Tried To Enter Sabarimala Sacked By BSNL For Hurting Religious Sentiments : 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சபரிமலையில் பெண்கள் அனுமதி குறித்து மிகவும் முக்கியமான வரலாற்றுத் தீர்ப்பினை வெளியிட்டது உச்சநீதிமன்றம்.   பெண்கள் சபரிமலைக்குள் நுழையலாம் என்ற தீர்ப்பு வெளியாகவும்  பல பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயற்சி செய்தனர்.  அவர்களில் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர் சமூக செயற்பாட்டாளர் ரஹானா பாத்திமா. அவர் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய குழுவுடன் இணைந்து கோவிலுக்குள் செல்ல முயன்றார்.

Advertisment

மேலும் படிக்க : பக்தர்களின் மனதை புண்படுத்திய முகநூல் பதிவு… கைது செய்யப்பட்ட ரெஹானா ஃபாத்திமா…

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிசியன் ஆக பணியாற்றி வந்த அவர் சமூக வலைதளங்களில் ஐயப்பன் கோவில் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதன் காரணமாக அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.  கடந்த 18 மாதங்களாக வேலை இல்லாமல் இருந்த ஃபாத்திமாவுக்கு கட்டாய ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காசோலை மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட அவர் பின்பு சிறையில் அடைக்கப்பட்டார்.  கேரள அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு முழுமனதாக ஆதரவு தெரிவித்தது.  மேலும் கோயிலுக்கு வரும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதமும் தந்தது. ஆனால் கேரளா தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உண்மையான கடவுள் பற்றாளர்களுக்கு எப்போதும் கோவிலுக்குள் அனுமதி உண்டு.  ஆனால் ஒருபோதும் தங்களின் சமூக செயல்பாட்டு சிந்தனைகளை நிறைவேற்ற இது இடமில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டினை சேர்ந்த பிந்து மற்றும் கனக துர்கா என்ற இரண்டு பெண்கள் மட்டுமே ஜனவரி 2ம் தேதி, 2019ம் ஆண்டு சபரிமலைக்கு சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். ஆனால் மற்றவர்களின் முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. இருப்பினும் பிந்து அம்மினி மற்றும் கனக துர்கா ஆகிய இருவரும், கோவிலுக்கு சென்று திரும்பிய நாளில் இருந்து பலத்த எதிர்ப்புகளையும், தாக்குதல்களையும் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : கல்லூரி பேராசிரியரின் பாலியல் கருத்துக்கு மாணவிகள் எதிப்பு : முகநூலில் மேலாடையின்றி புகைப்படம் பதிவேற்றம்; அரைநிர்வாண போராட்டம் நடத்திய ரெஹானா

Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment