இமய மலையில் நடிகர் ரஜினிகாந்த்

15 நாட்கள் வரையில் அவர் ஜம்மு, ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத் உள்பட பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆன்மீக சுற்று பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ஜம்முவில் உள்ள இமய மலை பகுதியில் சாமி கும்பிட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவர் இமயமலை பகுதிக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். 15 நாட்கள் வரையில் அவர் ஜம்மு, ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத் உள்பட பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவர் ஜம்மு பகுதியில் உள்ள மலைகளில் குதிரையில் பயணம் செய்து சுவாமி தரிசனம் செய்த வீடியோ, புகைப்படங்கள் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

×Close
×Close