ராமச்சந்திர குஹா போன்ற ஆண்ட்டி நேசனல்களை குஜராத்திற்குள் வரவேற்காதீர்கள் - ஆர்.எஸ்.எஸ் மாணவர் இயக்கம்

அகமதாபாத் பல்கலைக்கழகத்தின் சூழல் சரியில்லாததால் பணியில் சேரவில்லை என குஹா ட்வீட்.

ரித்து ஷர்மா, ரித்திக்கா சோப்ரா

ராமச்சந்திர குஹா அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் இணையவில்லை.  ராமச்சந்திர குஹா, ஒவ்வொரு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் ஆகவேண்டுமென கனவுகளோடு வலம் வரும் இளைஞர்களுக்கு மிகவும் பரீட்சையமானவர் ராமச்சந்திர குஹா. வரலாற்றாசிரியர், எழுத்தாளர், மற்றும் பேராசிரியர் ஆவர். இவர் குஜராத்தில் இருக்கும் அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற இருப்பதாக இருந்தது. ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் மாணவர்கள் இயக்கம், இவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர்.

ராமச்சந்திர குஹா அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் நியமனம்

அக்டோபர் 16ம் தேதி ராமச்சந்திர குஹாவினை மானுடவியல் பேராசிரியராகவும், காந்தி விண்டர் ஸ்கூலின் இயக்குநராகவும் நியமிப்பதாக அறிவித்திருந்தது அகமதாபாத் பல்கலைக் கழகம். ஆனால் அக்டோபர் 19ம் தேதி, பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில பாரதிய வித்யார்தி பரிஷாத் இயக்கம் போராட்டத்தை நடத்தியது.

ஆர்.எஸ்.எஸ் மாணவர்கள் அமைப்பு எதிர்ப்பு

அகமதாபாத் நகரில் இருக்கும் எ.பி.வி.பி இயக்கத்தின் செக்கரெட்ரி ப்ரவீன் தேசாய் இது குறித்து பேசுகையில் “நீங்கள் யாரை பொதுவுடமைசார் கருத்துகளை கொண்ட சிந்தனைவாதி என்கிறீர்களோ அவர் ஒரு ஆண்ட்டி நேசனலிஸ்ட். அவரை குஜராத்திற்குள் வரவழைத்தால், ஜே.என்.யூ போன்ற சூழல் தான் இங்கும் நிலவும் என்று குறிப்பிட்ட அவர், எங்கள் தரப்பு நியாயங்களை அகமதாபாத் பல்கலைக்கழக ரெஜிஸ்தராரிடம் எடுத்துக் கூறினோம் என்றார்.

மேலும் எங்களின் கல்விநிலையங்களுக்கு ஒரு அறிவாளிதான் தேவையே அன்றி ஒரு ஆண்ட்டி – நேசனலிஸ்ட் தேவையில்லை என்றும் நாங்கள் கூறினோம். அவரின் புத்தகங்களில் இந்திய தேசத்திற்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன என்பதையும் நாங்கள் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினோம் என்றார்.

பணியில் இணையவில்லை – ராமச்சந்திர குஹா

இந்நிலையில் ராமச்சந்திர குகா “என்னுடைய கட்டுப்பாட்டினையும் மீறிய சூழல் அகமதாபாத் பல்கலைக் கழகத்தில் நிலவி வருவதால் நான் அங்கு பணியில் சேரவில்லை. அகமதாபாத் நல்ல பல்கலைக் கழகம். அதன் பேராசிரியர்கள் மற்றும் துணை வேந்தர் மிகவும் திறமை மிக்கவர்கள். காந்தியம் குஜராத்தின் மண்ணில் மீண்டும் ஒரு முறை பிறக்கட்டும்” என்று கூறி ட்வீட் ஒன்றை செய்திருக்கிறார்.

ராமச்சந்திர குஹாவின் பணி நியமனத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரி அகமதாபாத் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரிடம் மெமோ ஒன்று அளிக்கப்பட்டது. அதில் “நாட்டில் பிரிவினை வாதத்தினை தூண்டும் வகையில் அடிக்கடி ராமச்சந்திர குகா எழுதியும் பேசியும் வருகிறார்.

ஜம்மு காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்துவிட வேண்டும் என ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், மத்தியப் பல்கலைக்கழங்களில் பேசியுள்ளார் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி இந்த பணியில் இணைவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகத்தின் மீது அரசியல்வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. 2019ம் தேர்தலுக்குப் பின்னால் இந்நிலை மாறலாம் என எழுத்தாளருக்கு மிகவும் நெருங்கிய வட்டாரம் கூறியிருக்கிறது. இது குறித்து அகமதாபாத் ரெஜிஸ்தரரிடம் கேட்ட போது “எனக்கு ட்வீட் விசயம் இப்போது தான் தெரியும். துணை வேந்தர தற்போது இந்தியாவில் இல்லை” என்றும் கூறினார். இது தொடர்பான முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close